பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

இன்று இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவேதான் என் இஸ்லாமியப் பிரச்சாரத்தை இஸ்லாமிய இலக்கியங்கள் மூலமும் 'தினமணி' போன்ற இதழ்கள் வாயிலாகவும் சொல்லி வருகிறேன். இன்னும் நான் சொல்ல விழைவதை சிலம்பொலி செல்லப்பனார் போன்றவர்கள் மூலமும், கருத்தரங்குகள் என்ற பெயரில் பிற சமயப் பேராசிரியர்களைக் கொண்டும் திறம்படச் சொல்லச் செய்கிறேன். மீலாது விழாக்களில் பிற சமயப் பெரியோர்களைக் கொண்டு பேசச் செய்ய வற்புறுத்தி வருகிறேன். இதனால் ஏற்படுகின்ற பயன் மிக அதிகம் என்பதை மறந்து விட வேண்டாம்.

'எம்' பெருமானார் இல்லை; 'நம்’ பெருமானார்

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை செளகார் பேட்டையில் மீலாது விழா நடைபெற்றது. முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் பெருமளவில் கலந்து கொண்ட பெருவிழா. அதில் நானும் சிலம்பொலி செல்லப்பனாரும் கலந்து கொண்டோம். சிறப்பு விருந்தினராகவும் சிறப்புப் பேச்சாளராகவும் ஜஸ்டிஸ் எஸ். மோகன் அவர்கள் கலந்து கொண்டார்கள். அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியும்கூட. அதில் பேசிய மெளலவி ஒருவர், மூச்சுக்கொருமுறை ‘எம் பெருமானார்’, ‘எம் பெருமானார்' என்று கூறிக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட ஜஸ்டிஸ் எஸ். மோகன் அவர்கட்கு கோபம் வந்துவிட்டது. அவர் உரையாற்றும் போது சற்று கோபம் கலந்த கண்டிப்பான தொனியில் “இங்கே ஒரு முஸ்லிம் பெரியார் பேசும்போது 'எம் பெருமானார்', 'எம் பெருமானார்’ என்றே கூறிக் கொண்டிருந்தார். பெருமானார் முஸ்லிம்களாகிய உங்களுக்கு மட்டுமே வந்த இறைதூதர் இல்லை. எங்களுக்கும் அவர் பெருமானார்தான். ஏன், உலக மக்கள் அனைவருக்குமே அவர் பெருமானார் ஆவார். நபிகள் நாயகத்தின் நெறிமுறைகளை ஏற்றுப் பின்பற்றுபவர்கள் என்பதால், அவரை முழுமையான இறைதூதராக -