பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

235


தேர்ந்தெடுத்து, இந்து மதத்தைப் புதுப்பிப்பதில், புத்துயிரூட்டி, புனரமைப்பதில் பலர் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதைத் தெளிவுபடுத்த வரலாற்றுப் போக்கில் ஒரிரு உதாரணங்களை உங்கள் முன் எடுத்து வைக்க விரும்புகிறேன்.

பிற சமயச் சீர்திருத்தம்

எட்டாம் - ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இஸ்லாம் தமிழகத்தில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. நந்தர்ஷா எனும் இறைநேசச் செல்வர், திருச்சி மாநகரின் மையப் பகுதியிலே அடக்கமாகி இருக்கின்ற அவர், அன்று சோழ நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இறைப் பணி ஆற்றியவர். ஏழை எளிய மக்களிடம் அன்போடு கலந்துரையாடி, ஓர் இறைப் பிரச்சாரத்தைத் திறம்பட ஆற்றி வந்தவர். ‘ஒரே இறைவன்; உருவமற்றவன்; அன்புருவாகவும் அருள் வடிவாகவும் விளங்குபவன். இணை துணை இல்லாதவன். அவன் யாராலும் பெறப்படவுமில்லை. யாரையும் பெற்றெடுக்கவுமில்லை. அவனை வணங்க எந்தத் தரகரும் தேவையில்லை. நேரடியாகவே வணங்கலாம். அவன் எந்தத் தேவையும் இல்லாதவனாதலால் எதையும் வைத்துப் படைக்க வேண்டாம். இறை வேதத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். நீங்களே புரிந்து தெளிவு பெறலாம். ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுவதன் மூலம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்’ என்றெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொன்ன போது அது அவர்களின் உள் மனதைத் தொட்டது. வேதத்தை நேரடியாகப் படித்தபோது ‘வேதம் இவ்வளவு எளிமையாக இருக்கிறதே’ என வியந்து போற்றியவர்களாக இஸ்லாத்தில் இணைந்தனர். இவர்களின் தொகை விரைந்து கூடிக் கொண்டே சென்றது.

அப்போது சோழ வளநாட்டை ஆண்டு வந்தவன் கூன் பாண்டியன் என்பவன். சோழ நாட்டின் மக்களின் பெருந்-