பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

ராஜேந்திரப் பிரசாத் அவர்களால் இந்தியா பிரிக்கப்பட்டால் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது இங்குக் கவனிக்கத்தக்க செய்தியாகும்.

ஏன் இத்தனை நபிமார்கள்? இத்தனை வேதங்கள்?

இறைவன், முதல் மனிதர் ஆதாம் (அலை) அவர்களையே முதல் நபியாக நியமித்து அவர் வழி வரும் சந்ததிகளுக்கு இறை நெறி புகட்ட இறைவன் பணித்திருந்தான். அவரும் அவ்வாறே செய்தார். காலப் போக்கில் அவர் போதித்த இறை நெறியை பின்வந்த சந்ததிகளில் சிலர் தங்கள் விருப்பு - வெறுப்புகளுக்கேற்ப மாற்ற திருத்தங்களைச் செய்து இறைநெறிப் போக்கைத் தடம் புரளச் செய்தனர். ஆதாம் (அலை) அவர்கட்கு தந்த இறைநெறி நாளடைவில் மாசுபட, அவர் சந்ததியிலே மீண்டும் ஒருவர் நபியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூலவடிவில் இறைச் செய்தி இறைவனால் வழங்கப்படுவதாயிற்று. காலப் போக்கில் மீண்டும் இறைநெறியில் மனிதத் தலையீட்டால் மாற்ற திருத்தங்கள். மீண்டும் நபி, இறை நெறி பெறுதல் தொடர்வதாயிற்று. சில பெரிய நபிமார்கள் ஒரே இறைவன், அவனே வணங்குதற்குரியவன் என வலுவாகப் போதிப்பர். காலப்போக்கில் இந் நபிமார்கள் மீது கொண்ட மதிப்பு, மரியாதையின் விளைவாக இந் நபிமார்களை அவர்கள் வாழ்ந்த போதே அவர் மீது கொண்ட அளப்பரிய அன்பின் காரணமாகவும் மதிப்பு, மரியாதையினாலும் அவர்களையே இறைவனாகக் கண்டு மகிழத் தொடங்கினர். அவ்வாறே அழைக்கவும் செய்தனர். அதை அறவே விரும்பாத நபிமார் அவர்களை கடிந்து கொண்டனர். இருப்பினும், அந்நபியின் மறைவுக்குப் பின்னர் அவர்களை இறைவனாகக் கண்டு வணங்கி மகிழ்வதிலே பேரானந்தம் கண்டனர். சான்றாக, ஈசா (அலை) அவர்கள் எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய கர்த்தரை வணங்குங்கள் என்று உபதேசித்தார். ஆனால், அவர் மீது அளவிலா அன்பு