பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

சகோதரர்கள், எவ்வித வேறுபாடும் தாரதம்மியமும் இல்லாது எல்லோர்க்கும் துணையாகவும் உதவியாகவும் இருப்பது இன்றியமையாக் கடமை என்பதை மனித நேய உச்ச உணர்வை ஊட்டி வளர்க்கும் உந்து விசையாயமைவதைப் பார்க்கிறோம்.

இவ்வாறு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் அனைத்துமே மனித நேயத்தை, சகோதரத்துவத்தை ஊட்டி வளர்த்து, மனித வாழ்வை வளப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

எப்படியும் என்பது பிற சமயம்
இப்படித்தான் என்பது இஸ்லாம்

இஸ்லாம் விதித்துள்ள ஐந்து கடமைகளை பிற சமயங்களும் வலியுறுத்தவே செய்கின்றன. இதை யாரும் மறுத்துரைக்க முடியாது. இஸ்லாம் விதித்துள்ள ஈமான் எனும் இறை நம்பிக்கையை எந்த மதம் வலியுறுத்த வில்லை? உலகிலுள்ள சிறிய, பெரிய மதங்கள் அனைத் துமே வலியுறுத்துகின்றன. ஆனால், இஸ்லாம் மட்டுமே ஒரே இறைவன்; உருவமற்றவன் என்பதை திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. தொழுகை எனும் இறை வணக்கத்தை எல்லாச் சமயங்களும் வலியுறுத்திய போதிலும் இஸ்லாம் மட்டுமே ஒரு நாளைக்கு ஐந்து முறை என வரையறுத்திருப்பதோடு எப்போது தொழ வேண்டும் எப்படித் தொழ வேண்டும் என்பதற்கு செயல் முறைகளையும் வகுத்தளித்துள்ளது. நோன்பு எனும் விரதத்தை வலியுறுத்தாத சமயம் எதுவுமே உலகில் இல்லை. ஆனால், வைகறையிலிருந்து அந்தி நேரம் வரை ஒரு சொட்டு நீரும் பருகாமல் எதையும் உண்ணாமல் புகைக்காமல் ஒரு மாதம் முழுமையும் நோன்பு நோற்பதை இஸ்லாம் மார்க்கம் மட்டுமே வரையறையோடு கடைப்பிடிக்கப் பணிக்கிறது. ஜகாத் எனும் தான தருமத்தை அனைத்துச் சமயங்களும் தம்மளவில் வலியுறுத்தவே