பக்கம்:எக்கோவின் காதல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2
அத்தை வீட்டில் பேய்!

'போங்களத்தான்! எப்பொழுது பார்த்தாலும் உங்களுக்குக் கேலிதான். இனிமேல் என்ன கேட்டாலும் நான் கொண்டு வந்து தரமாட்டேன் போங்கள்!' என்று அன்பும் நாணமும் கலந்த கொஞ்சுங் குரலில் கூறிவிட்டு ஓடி விட்டாள் ஊர்மிளா.

ஊர்மிளா என் அத்தை மகள். படித்துக் கொண்டிருக் கிறாள். 'பச்சைக்கிளி என்றால் 'பச்சைக்கிளியேதான்' மங்கைப் பருவம் தன் வருகையை எப்படி எப்படித் தெரிவிக்க வேண்டுமோ அப்படியெல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தமையால் அழகு பூரித்து வளர்ந்து கொண்டிருந்தது. அவ்வளவு அழகுள்ள அவளுக்குக் கூந்தல் மட்டும் கொஞ்சம் நீளத்தில் குறைவாகவே இருந்தது. அந்த ஒரு குறையைத் தவிர அழகிலும் குணத்திலும் வேறு குறை காண முடியாது. அந்தக் குறைகூட இந்தக் காலத்தில் 'பாஷன்' என்றாலும், தமிழ் இலக்கியங்களில் படித்தபடி பெண்களுக்குக் கூந்தல் அடர்ந்து நீண்டு இருக்க வேண்டுமென்பது என் ஆசை. தாழ்குழல் - தோகை போன்ற குழல் என்றெல்லாம் வருணிக்கப் பட்டிருப்பதைப் படித்த எனக்கு அது குறையாகத் தோன்றியதில் வியப்பில்லை. இருந்தாலும் ஏனைய நிறைவுகள் அந்தக் குறையை மறைத்து விட்டன.