பக்கம்:எக்கோவின் காதல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

87

மாறா! அவள் ஒரு தாசி. பிறப்பிலேயே தாசியல்லள். சமூகம் அவளைத் தாசியாக்கிற்று. அவள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். பருவம் வந்ததும் பெற்றோர், அவளுடைய மணத்திற்கு முயற்சி செய்தனர். இடையில் அவளுக்கும் அவளுடைய மாமன் மகனுக்கும் காதல் வளர்ந்து வந்தது. அவன் தன் தாயிடம் அவளையே மணக்க வேண்டும் என்று கூறினான். ஆனால் தாய் உடன்படவில்லை . தாய் சொல்லைத் தட்டி நடக்க முடியாத நிலைமையில் அவன் இருந்தான். அவளும் தன் தாயிடம் கூறினாள், அத்தானைத் தான் மணப்பேன் என்று. அவள் உடன்பட்டாலும் 'மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொள்ளாததால் நாமே வலியப் போவது அழகில்லை' என்று சொல்லி விட்டாள்.

ஒரு நாள் அவளும் அவனும் சந்தித்தனர். “அம்மா சொல்வதை மீறி எப்படிச் செய்வது? உன் விருப்பப்படி உன் வீட்டார் விருப்பப்படி நடந்துகொள். என்மேல் வருத்தப்படாதே.” என்று சொல்லி விட்டான்.

வேறு வழியின்றிக் கிழவன் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டாள். ஏழ்மையில் பிறந்த இளம் பெண்கள் இப்படிப் பலியாவதைத்தானே இந்தப் புண்ணிய பூமியிலே காண்கிறோம். அவள் மட்டுமென்ன அதற்கு விலக்கா? அவளும் வெகு விரைவில் “விதவை"ப் பட்டியலில் சேர்க்கப்பட்டாள். அந்த நிலையில்தான் தாயோடு கடைமுழுக்குக்கு ”தீர்த்தம்" ஆட வந்திருந்தாள்; பாபத்தைப் போக்கிப் பரமன் அருளைப் பெற வந்திருந்தாள். பாபம் போனாலும் போகாவிட்டாலும் 'பரமன் அருள்' கிடைத்தே விட்டது. தங்கியிருந்த வீட்டில் நள்ளிரவில் பரமன் என்ற இளைஞன் அருளுக்குப் பாத்திரமானாள். பலவகைச் சோதனைகளுக்குப் பிறகு பரமனோடு ஐக்கியமாய்