பக்கம்:எக்கோவின் காதல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

86

"காப்பி போடலாம் என்றால் இந்த நேரத்தில் பால் எங்கே கிடைக்கப் போகிறது. இதோ 'கலர்' சாப்பிடுங்கள்” என்று தந்தாள்.

மறுக்க மனமில்லை . “இந்த அறையில் படுத்துக் கொள்ளுங்கள்" என்று பரிவுடன் ஓர் அறையைக் காட்டினாள்.

படுத்துக் கொண்டேன். உறக்கமா வரும்! உள்ளத் துடிப்பு அதிகமாயிற்று. 'என்ன இவ்வளவு அன்பாக இருக்கிறாளே. வேறு ஆடவரையும் காணவில்லை' என்று எண்ணிக் கொண்டிருந்த நான் காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினேன்.

“வெற்றிலை போடுங்களேன்” என்று சிரித்துக் கொண்டே மெத்தையில் உட்கார்ந்தாள். பாக்குப் பொட்டலம் அவள் கையாலேயே உடைக்கப்பட்டது. சுண்ணாம்பும் அவள் தான் தடவினாள். அப்புறம் எனக்குச் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்!

சிரித்தாள், நானும் சிரித்தேன்.

காற்றின் தாக்குதலோ - அலையின் மோதுதலோ இன்றிப் படகு அமைதியாகச் சென்று கொண்டிருந்தது.

“சுந்தரம்! அவளை யாரென்று விசாரித்தாயா?" என்று குறுக்கிட்டுக் கேட்டான் நண்பன் மாறன்.

“ஓ, யாரென்றும் அறிந்துகொண்டேன். இனிமேல் அவள் என் மனைவி என்பதையும் உறுதி செய்துவிட்டேன்; எனது வாழ்க்கைப் பாதையை வேறு வழியில் திருப்பி விட்டேன். ஒரு வரம்பும் செய்து கொண்டேன்”.