ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு குறிஞ்சி/கபிலர்/21.அன்னாய் வாழிப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

மூன்றாவது நூறு குறிஞ்சி[தொகு]

பாடியவர்: கபிலர்[தொகு]

21.அன்னாய் வாழிப் பத்து[தொகு]

201. அன்னாய் வாழிவேண் டன்னை என்னை

தானும் மலைந்தான் எமக்கும் தழையாயின

பொன்வீ மணியரும் பினவே

என்ன மரம்கொல்அவர் சாரல் அவ்வே.

202. அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்

பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்

குடுமித் தலைய மன்ற

நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே.

203. அன்னாய் வாழிவேன் டன்னைநம் படப்பை

தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு

உவலை கூவற் கீழ

மானுண்டு எஞ்சிய கலிழி நீரே.

204. அன்னாய் வாழிவேண் டன்னைஅஃது எவன்கொல்

வரையர மகளிரின் நிரையுடன் குழீஇப்

பெயர்வழிப் பெயர் வழித் தவிராது நோக்கி

நல்லள் நல்லள் என்ப

தீயேன் தில்ல மலைகிழ வோர்க்கே.

205. அன்னாய் வாழிவேண் டன்னையென் தோழி

நனிநான் உடையள் நின்னும் அஞ்சும்

ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்

மலர்ந்த மார்பின் பாயல்

துஞ்சிய வெய்யள் நோகோ யானே.

206. அன்னாய் வாழிவேண் டன்னை உவக்காண்

மாரிக் குளத்துக் காப்பாள் அன்னன்

தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள்

பாசி சூழ்ந்த பெருங்கழல்

தண்பனி வைகிய வைக்கச் சினனே.

207. அன்னாய் வாழிவேண் டன்னை நன்றும்

உணங்கல கொல்லோநின் தினையே உவக்காண்

நிணம்பொதி வழுக்கில் தோன்றும்

மழைத்தலை வைத்துஅவர் மணிநெடுங் குன்றே.

208. அன்னாய் வாழிவேண் டன்னை கானவர்

கிழங்ககழ் நெடுங்குழி மல்க வேங்கைப்

பொன்மலி புதுவீத் தாஅம் அவர் நாட்டு

மணிநிற மால்வரை மறைதொறு

அணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே.

209. அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று

யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்

கொண்டல் அவரைப் பூவின் அன்ன

வெண்டலை மாமழை சூடித்

தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே.

210. அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை

புலவுச்சேர் துறுகல் ஏறி அவர்நாட்டுப்

பூக்கெழு குன்றம் நோக்கி நின்று

மணிபுரை வயங்கிழமை நிலைபெறத்

தணிதற்கும் உரித்துஅவள் உற்ற நோயே.