பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149

தது. அம்மனிதர் காப்பியைக் குடித்தார். பயந்து பயந்து செத்தார் அவர்.

“மாமா ! இவர் யார் தெரியுங்களா? பெரிய பணக்காரராம்! அந்தத் திமிரிலேதான் என்னைக் கற்பழிக்க முனைஞ்சார். அப்ப ஒருவாட்டி அறை கொடுத்தேன். இப்பவும் ஒருவாட்டி கொடுத்தேன். இந்த ஆளை என் கண்ணிலே காட்டும்படி பகவானை நெதம் பிரார்த்திச்சேன். மனுசன் கிடைச்சார்!” என்று நிறுத்தினாள் அவள். அசல் தமிழச்சியாக அவள் சுடர் விட்டாள்.

அப்போது சோமசேகரின் குடும்ப டாக்டர் நாகலிங்கம் உள்ளே நுழைந்தார்; தளர்ந்து போய்விட்ட அவர் மெல்ல நுழைந்தார். அவரைக் கண்டதும், அந்தக் குற்றவாளி நபர் நடுங்கினார். டாக்டர் அந்த ஆளைப் பார்த்துவிட்டார். “தம்பி, என்ன இங்கே?” என்றார்.

அதற்கு அம்மனிதர் அழுகையை மட்டுமே பதிலாகத் தெரிவித்தார்.

“அண்ணா ! நான் பாவி ! இந்தப் பெண்ணோட அதீதமான அழகிலே கிறுக்காகி, அதைக் கெடுக்க முயற்சி செஞ்சேன். அவ்வளவுதான்! அவள் நெருப்பு. சுட்டிட்டுது!... அவள் பரிசுத்தமான தெய்வம்! நான் செஞ்ச தப்புக்கு இப்போ தண்டனை அனுபவிக்கக் காத்திருக்கேன்!...” என்று தேம்பினார்.

“அட பாவி ! இந்த வயசிலே உனக்கு ஒரு கேடா ? இந்தப் பொண் ஒத்த ஒரு மகள் உனக்கு இருக்கையிலேகூட உனக்கு இப்படி ஒரு இசை கேடான புத்தியா?” என்று காறி உமிழ்ந்தார்.

“அம்மா, நீ தண்டனையைக் கொடம்மா !” என்று சொல்லி அவர் எழுத்தார்.

“அவர் செஞ்ச தப்பை உணர்ந்து அழுகிறாரே, அதுவே ஒரு தண்டனைதான் டாக்டர் ஸார்!” என்றாள் பூவழகி வெகு நிதானமாக.

“டே ராமு ! உன்னை என் தம்பின்னு சொல்லிக்கிறதுக்கே எனக்கு ஷேம் ஆக இருக்குடா! போடா !” என்று கர்ஜனை செய்தபடி, அவரை நெட்டிப் பிடித்துத் தள்ளினார்.

அம்மனிதர் தரையில் விழுந்து, ரத்தத் துளிகளை வடித்து விட்டு எழுந்து மறைந்தார்.