பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எத்தனை நாட்டில் இருந்த காலாட்கள்!
அனைத்தையும் சேர்த்து, அலை அலையாக
உருசிய நாட்டை அழிக்கச் செலுத்தினான்!
உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான்!
பெரிதினும் மிகவும் பெருநிலை கண்ட
உருசிய நாட்டை ஒழிக்கச் செலுத்தினான்!
மக்களின் வாழ்வின் மதிப்பு இன்னதென,
ஒக்க வாழும் உறுதி இதுவென
முதிய பெரிய முழு நிலத்திற்கும்,
புதிய தாகப் புகட்டிய நாட்டில்
செலுத்தினான் இட்லர்; தீர்ந்தான்; முற்றிற்று!

6
லெனினைப் பற்றிய புத்தகங்கள்

முப்பதாம் ஆண்டுகளில், முக்கியமாக அதன் பிற்பகுதியிலேயே, லெனினைப் பற்றிய நூல்கள் தமிழில் வெளிவரத் தொடங்கின எனலாம். 1933-ம் ஆண்டிலேயே திருசிரபுரம் அ. நடராஜன் எழுதிய “லெனின்: ருஷ்யாவின் விடுதலை வீரன்” என்ற நூல் வெளிவந்தது. 32 பக்கங் கொண்ட இந்தச் சிறுநூலை சென்னை தமிழரசுப் புத்தகாலயம் வெளியிட்டிருந்தது. சிறு நூலாயினும், தமிழில் புத்தக வடிவில் லெனினைப் பற்றி வெளிவந்த முதல் வாழ்க்கை வரலாறு இதுதான் என்ற சிறப்பு இதற்குண்டு. இதன்பின் முப்பதாம் ஆண்டுகளின் பிற்பாதியில் லெனினைப் பற்றி மேலும் சில நூல்கள் வெளிவந்தன. இவற்றில் முதலாவது புத்தகம் “காந்தியும் லெனினும்” என்ற தலைப்பில் முதுபெரும் அறிஞரும், எழுத்தாளரும், பத்திரிகையாளரும், அந்நாளில் ரங்கூனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஜோதி என்ற மாசிகையின் ஆசிரியருமான வெ. சாமிநாத

40