பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அடி ஆழம் வரை நிற்கும். உருகும் பனிக்கட்டி, அமெரிக்க, சைபீரிய ஆறுகள் ஆகியவற்றிலிருந்து இந்நீர் உண்டாகிறது.

மலைத் தொடர்கள்

இதில் மலைத்தொடர்களும் தீவுகளும் காணப் படுகின்றன. தீவுகளில் பெரியது கிரீன்லாந்து.

காட்டாக, இதில் லோமோசோனவ் மலைத் தொடர் இருப்பதாக அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் உயரம் 9,000 அடி.

லோமோசோனவ் என்பார் உருசிய அறிவிய லார் ஆவார். இவர் அம்மலைத்தொடரின் இடத்தை முன்கூட்டி அறிவித்தார். ஆகவே, இம்மலைத் தொடருக்கு அவர் பெயர் இடப்பட்டிருக்கிறது.

இம் மலைத்தொடர், நீரில் மூழ்கிய மலைத் தொடர் ஆகும். இது ஆர்க்டிக்கடலை இரு பகுதி களாகப் பிரிக்கிறது. இவை ஒவ்வொன்றிலும் நீரோட்டம் உண்டு. அந்நீரோட்டங்களில் ஒன்று வலஞ்சுழியாகவும், மற்றொன்று இடஞ்சுழியாகவும் ஓடுகின்றன.

உப்பு

இதற்கு மற்றக் கடல்களைப் போன்று அவ் வளவு அதிகமாகக் கரிக்கும் தன்மை இல்லை. அமெரிக்க, சைபீரிய ஆறுகள் இதில் கலப்பதே உப்புத் தன்மை அளவின் குறைவுக்குக் காரணம் ஆகும்.