பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அன்ன

ம்

இதுவரையில் தெய்வங்கள், முனிவர்கள், புல வர், அரசர், விலங்கு தூதுவராகச் சென்ற வரலாறு களைக் கண்டோம். பறவையும் தூது சென்றதை இப்பகுதியில் காண்போமாக, அப் பறவை எது ? அதுவே அன்னம், இப்பறவை எங்குத் தூதாகச் சென்றது? யாரிடம் தூது சென்றது? ஏன் சென்றது? என்பன போன்ற வினாக்களுக்கு விடை கண்டால் அன்னம் தூது சென்ற முறையினை நன்கு உணர்ந்து கொள்ளலாம். இந்த அன்னத் தூது நளனது சரித் திரத்தில் இருக்கின்றது.

நளன் தன் பரிவாரங்களுடன் புறப்பட்டு ஒரு சோலையை அணுகினான். சோலையின் காட்சியினைக் கண்டு இன்புற்றான். இயற்கை அழகைக் கண்டு மகிழ்ந்தான். இந்நிலையில் தாமரைத் தடாகத்தில், தாமரை மலரில், பொலிவுடன் வீற்றிருந்த ஓர் அன் னத்தை நான் கண்டான். தாமரை அன்னத்திற்கு உரிய இடம். இது வீற்றிருக்கும் அழகு எல்லோ ருடைய உள்ளத்தையும் கவர்ந்துவிடும். திருஞான சம்பந்தர் அன்னம் தாமரையில் வீற்றிருக்கும் சிறப் பைக் கண்டு, 'அடர்ந்த இதழ்களையுடைய தாம் ரைப் பூவாகிய பீடத்தில், தாமரையிலையாகிய குடை யின் கீழ், பக்கங்களில் உள்ள வயல்களில் நன்கு வளர்ந்த செந்நெற் கதிர்கள் சாமரைபோல் வீச அரச அன்னம் வீற்றிருந்தது' என்று கூறியுள்ளார்.