பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயம்வர நாளைக் குறிப்பிட்டு அவரவர்கட்கு மண ஓலையினையும் விடுத்தனன்.

வீமராசனால் விடுக்கப்பட்ட தூதுவர் நிடத தேசத்து மன்னனாம் நளமகாராசனிடம் தமயந்தி யின் சுயம்வரங் குறித்த மண ஓலையுடன் வந்து சேர்ந்தனர். தமயந்தியின் சுயம்வர ஓலையினை நீட்டி..னர். அதனை யேற்ற நளன், உள்ளம் மகிழ்ந்து படித்து உடனே விதர்ப்ப தேசம் புறப்பட ஆயத்த மானான். தன்கு அலங்கரிக்கப்பட்ட தேரின்மீது அ ம t ந் து விதர்ப்பதேசம் நோக்கிப் புறப்பட் டான்.

நளன் தமயந்தியின் சுயம் வரத்திற்குப் புறப்பட் 48.-து போலவே, முன்பு குறிப்பிடப்பட்ட வானவர் கள் நால்வரும் புறப்பட்டனர். இடை வழியில் அத் தேவர்கள் நளனைக் கண்டனர். நளனது அழகினை உற்று நோக்கிய இந்திரன், 'நான் உடம்பெல்லாம் ஆயிரம் கண்களைப் பெற்றதன் பயனை இன்றுதான் பெற்றேன். இந்த ஆயிரங் கண்களாலும் நளனது அழகைக் கண்டு இன்புற்றேன்' என்றனன்.

வருணனும் நளனது அழகை வியந்து கூறத் தொடங்கி 'ஆ! இவ்வளவு 6ாழில் நலம் படைத்த இந் நளனைத் தவிர்த்து, அம் !.மடந்தையரம் தமயந்தி எப்படி மற்றொருவனுக்கு மணமாலை சூட்டுவாள் ? அது சந்தேகம்தான்!' என்று முடிவு கட்டினன்.

அக்கினியும் தன் கருத்தினை அறையலுற்ற வனாய் இவ்வளவு அழகுடைய காளையாம் நளனுக்கு