பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொ$$$8)னது உலைக் களத்தில் செம்மை பெறக்கிடக் கின்றன” என்று விளக்கமாக எடுத்து மொழிந்தனர்.

இவ்வாறு கூறியதன் உட்பொருள் 'உன் போர்க் கருவிகள் போர்முனை காணாமல் உன் அரண்மனை. 'சில் கிடக்கின்றன. அதிகனது படைக்கலங்கள் போர்முனை கண்டு நன்கு பழகி வெற்றி மாலை சூடிச் சிதைந்து கிடக்கின்றன. இத்தகைய படையினை யுடை. அதிகமானுடன் நீ பகை கொண்டு போர் தொடுத்துப் பயனில்லை. வெற்றி அவனுக்கே அன்றி உனக்குக் கிட்டாது' என்பதாம்.

இளந்திரையன் நுண்ணறிவினன் ஆதலின், ஒளவையாரின் அமுதவாக்கின் உள்' பொருளை உணர்ந்து, அதிகனோடு அமர் புரிய இருந்த எண் ணத்தை விட்டொழித்தான். ஒளவையாரும் இளந் திரையனிடம் விடை பெற்று அதிகனை அடைந் தனர். தாம் தூதுவராகச் சென்றது முதல் மீண்டது வரையில் நிகழ்ந்த யாவற்றையும், ஒன்றையும் விடாமல் கூறினர். அதிகனும் மகிழ்ந்தனன், போரும் நின்றது. அறிஞர் : முனைந்தால் ஆகாததும் 3உண்டோ ?