பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

முன் வீரவாகு தேவர் தோன்றினார். சூரன் வீரவாகு விற்கு ஓர் ஆதனம் அளிப்பதற்குத் தாமதம் செய் யவே, இறைவன் அருளால் ஓர் ஆதனம் அங்கு வந்துற்றது, அதனிடை வீரவாகு அமர்ந்தனர்.

சூரபதுமன் முன் வீரவாகு தேவர் இறுமாப் புடன் வீற்றிருந்ததைக் கண்ட அவையினர் பல வாறு சிந்தனை செய்தனர். சூரனுக்கும் வீரவாகு தேவர் தன் முன் சிறிதும் அஞ்சாது வீற்றிருந்தது குறித்துப் பெருஞ்சினம் எழுந்தது.

“சிறிதும் அஞ்சாது என் முன் அமர்ந்திருக்கும் நீ யாவன். சொல்லுக” என்று கேட்டனன் சூரபது மன். உடனே வீரவாகு தேவர் சிறிதும் அஞ்சாது, 'நான் குமாரக் கடவுளால் அனுப்பப்பட்ட தூதன். என் பெயர் வீரவாகு என்பது. உனக்கு நல்புத்தி கூறி நீயும் உன்னைச் சார்ந்தவர்களும் பிழைத்து நல்வாழ்வு வாழத் தேவர்களையும் சயந்தனையும் சிறை நீக்குமாறு கூறிப் புத்தி புகட்டி வருமாறு முருகப்பெருமான் என்னை அனுப்பியுள்ளார்" என்று கூறித் தாம் வந்த காரணத்தை அறிவித்தனர்.

இவ்வாறு கூறியதோடின்றி மேலும், “ஏ சூர பத்மா ! சத்தியத்திலிருந்து தவறி, கொலை, களவு முதலிய) கொடுஞ் செயல்களைச் செய்து, நல்ல பண்பு வாய்ந்த பெரும் மக்களுக்குத் தீங்கு செய்தவர்கள் பொறுக்கமுடியாத பழிக்கு ஆளாவார்கள். விரைவில் மாள்வர். இவர்களே அன்றி இவர்களின் சுற்றமும் அழியும். பல பிறவிகளிலும் துன்பம் துய்ப்பர் (அனு பவிப்பர்). இதனை நீ அறியாதது என்னே ? நீ பெற்றி