பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ண

ன்

தருமர் முதலிய ஐவர் பஞ்ச பாண்டவர் என்றும் துரியன் முதலிய நூற்றுவர் 'கௌர வர் என்றும் கூறப்படுபவர் என்பது நீங்கள் அறிந்ததுதானே? இவர்கள் ஒருவர்க்கொருவர் பங்காளிகளாயினும் பகைவர்களாவே இருந்தனர். இப்பகைமை கெளர வரிடத்திலிருந்து எழுந்ததே அன்றிப் பாண்டவ ரிடத்திலிருந்து பிறந்த தன்று.

தருமர் ஊழ்வலி காரணமாகத் துரியனுடன் பந்தய மிட்டுச் சூது ஆடித் தமக்குரிய சொத்துச் சுதந்திரங்களைத் தோற்றனர். இங்ஙனம் தோற்ற வற்றை மீண்டும் பெற விரும்பினால், பாண்டவர் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து பதின் மூன்றாவது ஆண்டு தாம் இருக்கும் இடம் இன்னது என்பது ஒருவரும் அறியாத நிலையில் தம் உருவினை மறைத்து வாழ்ந்து நாட்டிடை வந்தால் இழந்த உரிமைகளை ஈவதாகத் துரியன் கூறியிருந்தனன். இந்த நிபந்தனைகளையும் நீங்கள் முன்பே அறிந் திருக்கிறீர்கள். அங்ஙனமே பாண்டவர் ஐவரும் பன்னிரண்டாண்டுகள் காட்டில் இருந்துவிட்டு, ஓர் ஆண்டு விராடபுரத்தில், அந்நகரத்து மன்ன னும் அறியாத நிலையில் தம்மை வெளிப்படுத்தாது இருந்து, தம் உரிமை பெறத் துரியனிடம் தூத னாக்க் கண்ணனை அனுப்புவதென ஐவரும் முடிவு