பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

செய்தனர். அவ்வாறே கிருட்டிணனும் துரியன்பால் தூதுவனாகச் செல்ல உளம் கொண்டனன்.

கண்ணன் துரியோதனர்பால் தூது போவதற்கு முன், தருமரையும், அவர் தம் தம்பிமார்களையும் உடன் வைத்து, ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத் தினர். அதுபோது, கிருட்டிணனே அக் கூட்டத் தின் தலைவனாக இருந்து ஐவருடைய கருத்துக்களை யும் கூறுமாறு கேட்டனன். அவ்வாறே ஒவ்வொரு வரும் தனித்தனியாகத் தம் தம் கருத்துக்களைக் கூறத் தொடங்கினர்.

முதலில் தருமர் கிருட்டிணனை நோக்கி, “கண்ணா!துரியோதனாதியர் போர் வேண்டும் என்று சஞ்சய முனிவரிடம் கூறி அனுப்பினாலும், நாம் அரச நீதி தவறி உடனே போருக்கு ஆயத்தம் ஆதல் கூடாது. இது மன்னர் கடமையும் ஆகாது. பகை என்னும் நெருப்பை மிகவும் மூட்டி, வளர்த் தால் சண்டையில் இரு பக்கத்தினரும் இறக்க நேரி டும். ஒரே குளத்தில் தாமரை மலரும், அல்லி மல ரும் வளர்ந்து, பூத்து விளங்குவது போல, கௌரவ பாண்டவர்களாகிய நாங்கள் ஒன்று சேர்ந்து ஒற்று மையாக வாழ்வு நடத்துவதே முறை. ஆகவே, அரவக்கொடியோனிடம் சமாதான மொழிகளையே சாற்றி வருக, துரோணர் முதலிய ஆசிரியர்களையும் வீடுமர் முதலிய பெரியோர்களையும் மற்றும் துணைவர் களாக உள்ள துரியோதனாதியரையும் போரில் வென்று இவ்வுலகை ஆளுவதை விட, முன்போலக் காட்டில் இரவும் பகலும், காய்கனி, கிழங்கு முதலிய