பக்கம் பேச்சு:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/38

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

@Arun kaniyam: //திருக்குறளுக்கு உரையெழுதியவர்களில் பரிமேலழகர் உரை படித்த பண்டிதர் வியக்க எழுதப்பட்டது. மணக்குடவர் உரை, மக்கள் மொழிக்கு நெருக்கமான நடையில் நேரடியான பொருள் கொண்டு எழுதப்பட்டது. மணக்குடவர் உரையோடு சிதம்பரம்பிள்ளை திருக்குறளின் அறத்துப்பாலைப் பதிப்பித்தார். மணக்குடவர் உரையின் நடை கடினமாக இருக்கும் இடங்களில் எல்லாம் தனது உரையை எளிய நடையில் எழுதினார். திருக்குறளை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும் என்ற பேரார்வத்தால் அவர் திருக்குறள் பதிப்பு வேலையை மேற்கொண்டார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தமிழ் நடை சாதாரணமாக, இலக்கியப் பயிற்சியில்லாத தமிழனுக்கு விளங்காது. ஆகையால், எளிய நடையில் இருந்த பழைய உரையை அடிப்படையாகக் கொண்டு நமது காலத்து மொழிநடை கலந்து உரை எழுதினார். இது போலவே தொல்காப்பியத்தைத் தமது உரையோடு பதிப்பித்தார். ஒழுக்க முறையில் மிக உயர்ந்த கருத்துக்கள் கொண்டவர் வ.உ.சி.// இப்படைப்புகளை பெறுவதற்கான திட்டப்பணி இருப்பின் என்னையும்இணைத்து முன்னுரிமை தருக.--தகவலுழவன் (பேச்சு) 10:27, 25 மே 2019 (UTC)[பதிலளி]

@தகவலுழவன்: நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களில் இதுவரை 2000 நூல்கள் மட்டுமே விக்கியில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஏனைய நூல்களையும் தரவேற்றம் செய்ய வேண்டும். முன்னர் பயன்படுத்தப்பட்ட விதிமுறைகளினை அடிப்படையாகக் கொண்டு இப்பணியினை மேற்கொள்ளலாம். சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என எண்ணி வருகிறேன். உரிய திட்ட வரைவை உருவாக்கிய பின் தெரிவிக்கின்றேன். TVA ARUN