பக்கம்:இராவண காவியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருந்திக் கொண்டிருக்கும்போது, இராமன் படையைக் கண்டு வெளிப்பட்டான்.]

"இருண்டபெ ரிருளை நீக்கி இளங்கதிர்ச் செல்வன், துப்பில் திரண்டுமே பொருது வென்று சென்றவர் போக, மண்ணில் புரண்டுமே யுயிரை நீத்துப் போனமா மறவர்க் கின்றோ டிரண்டுநா ளாயிற் றென்ன எண்ணுவான் போல வந்தான்."

[இராவணகாவியம்: இரண்டாம் போர்ப் படலம்-1] [துப்பு-வலி. துப்பில் திரண்டு-வலிமிக்கு]

2. கதிரவன் மறைவு தன் றனிப் புதல்வன், வென்றித் தசமுகன் முடியில் தைத்த மின் றளிர்த் தனைய பன்மா மணியினை வெளியிற் கண்டான், ஒன் றொழித் தொன்றா மென்றவ் வரக்கனும் ஒளிப்பான் போல வன் றனிக் குன்றுக் கப்பால் இரவியும் மறையப் போனான்,"

       [கம்பராமாயணம்: மகுடபங்கப் படலம்-41] 
 [சூரியன் மகனான சுக்ரீவன், இராவணனது மணிமுடியைச் சிதைக்க, இராவணன் அங்கு நின்று சென்றது போல, மகன் வென்றிகண்ட மகிழ்வால் சூரியனும் மறைந்து சென்றான்.]

"குருதி யாடிக் குவிபிணக் காடணர் பரவை போலப் படர்செங் களத்தினை பரிதி காணப் படாதெனச் செல்லவே இரவு வந்த தினுங்கொலு வேனெனா."

     [இராவணகாவியம்: முதற்போர்ப்படலம்-77] 
 [அணர்தல்-மேல் நோக்கி எழுதல். பரவை - கடல்.]
 விரிக்கிற் பெருகும்! பெருங்காப்பியத்திற்குள்ள இலக்கண முறை சிறக்கச் செய்துள்ளார். கவிச்சுவை, ஓசை, உவமைகள், அணிகள், அழகுடன் அமைந்துள்ளன. அகம் புற இலக்கணங்களில் கூறப்படும் களவு, கற்பு, போர் முறை, வீரம் முதலியவற்றிற்கோர் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றது. எனவே சிறந்ததோர் காவியமாக அமைந்துள்ள இராவணகாவியம் தமிழின் இனிமை கண்டு சொக்கு வோருக்கு, விருந்தாக அமையுந்தகைமைத்து.
  இராமாயணம், ஆரிய ஆதிக்கத்துக்குப் பயன் பட்டது மறுக்கொணாத உண்மை. பண்டித ஜவஹர் தம் திருமகளா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/18&oldid=1522460" இலிருந்து மீள்விக்கப்பட்டது