பக்கம்:இராவண காவியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழகியும் வந்தனர். இவ்வாறே பின்னரும், பின்னரும் பலர் வந்தனர், நாளடைவில் அவர் தமிழகம் முழுதும் புகுந்து, தமிழக தண்ருட் னும், புலவருடனும் நெருங்கிப் பழகி அரசர் உறவுையும் பெற்றனர். நாளாகாக இளைஞரும் வந்து, தமிழ்ச் செல்வ இளைஞரிடம் தோழமை செய்யும் பார்ப்பன வேலையும் சிலர் பார்த்து வந்தனர்

நாளடைவில் பலர் பெண்டு பிள்ளைகளுடன் குடியேறி விந்தக் காடுகளில் இலைக்குடில்கள் அமைத்து வாழ்ந்து வந்தனர். அவர் வேள்வி மூலம் உயிர்களைக் கொன்றுண்ணத் தொடங்கினர். தமிழ் மக்கள் தடுத்தனர். அவர் கேட்கவில்லை. இருவருக்கும் போருண்டானது. அம்மக்கட்போர் தமிழாரிய மன்னர் போரானது, முடிவில் வடவரசர் தோற்றனர். ஆரிய முனிவர்கள் அஞ்சினவர் போல நடித்துப் பல தமிழாசர்களை வஞ்சித்துக் கொன்றனர், நூற்றுக்கணக்கான தமிழர் கோட்டைகளைத் தீயிட்டெரித்தனர்.

விந்தச்சாலி லிருந்த இடைவள நாட்டை யாண்டு வந்த தாடகை யென்னும் தமிழரசி இராவணனது துணையை வேண்டினாள். அவன் சுவாகு என்னும் படைத்தலைவனைப் பெரும் படையுடன் அனுப்பினான். சுவாகு இடைவளஞ் சென்று ஆரியப் புலைவேள்வியை அகற்றிக் காத்துவந்தான், அதனால், கோசிகன் என்னும் ஆரிய முனிவன் வேள்வி செய்ய முடியாது மன முடைந்து சென்றனன்

வடநாட்டில் சரயுவாற்றங் கரையில் உள்ள அயோத்தியில் தசரதன் என்னும் சிற்றரசன் ஒருவன் இருந்தான். அவன் கோசலை, சுமத்திரை என்னும் இருமனைவியருடன் பல காதல் மகளிருடனும் களித்து வந்தான்; தனது தோள் வலிமையால் பல நாடுகளை வென்று கோசலம் என்னும் நாட்டை நிறுவிப் பேரரசனானான். பின் தன் தகுதிக்கேற்பப் பேரரசனான கேகயன் மகள் கைகேசியைக் கேட்டான். அவள் மறுக்கவே, தனது நாட்டைக் கைகேசிக்குப் பரிசமாகக் கொடுத்து அவளை மணந்தனன்

கிழப்பருவமுற்றும் பிள்ளையில்லாது வருந்திய தசரதன், குலகுரு வசிட்டிர் சொற்படி கலைக்கோட்டு முனிவனைக் கொண்டு குதிரை வேள்வி செய்தனன். ஓராண்குதிரை படையுடன் ஓராண்டில் நாடு சுற்றி மீண்டது. முனிவர் வேள்வி தொடங்கினர். அவ்வேள்விக் குதிரையைக் கோசலை லான்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/22&oldid=1157724" இலிருந்து மீள்விக்கப்பட்டது