பக்கம்:இராவண காவியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

இராவண காவியம்


18.கொல்லம் தோடு குமரி முதலா

மல்லன் மிகும்பன் மலைவள நாடும்

எல்லியல் பாகவே ழேழொடு குன்றா

நல்லியல் பாகவந் நாடு பொலிந்த.


வேறு


19.பருவளக்குமரி யோடு பஃறுளியாறு வீறுகொடு பாய்தலான்

பெருவளத்தின தாற்பெ ருவள நாடெனும்பெயர் பெற்றதால்;

குருவளக்குமரி பாய்த லாற்குமரி நாடெ னும்பெயர் கூறுமால்;

மருவளத்ததென் பாலி ருத்தலான் வழங்கு மஃதுதென் பாலியே.


வேறு


20.தன்னிகராந் தமிழ்வளர்க்கத் தலைச்சங்கந் தனைநிறுவி

மன்னுபெரும் புகழ்பூத்த மழைவளக்கைப் பாண்டியர் தந்

துன்னுமுயர் பதியான தொன்மதுரை யெனுநகரைத்

தன்னுடைய தலைநகராத் தான் கொண்ட தந்நாடே..


21.அந்நகரம் பஃறுளியாற் றங்கரையி லுலகிலுள்ள

எந்நகரு மிந்நகருக் கிணையாகா தெனும்படிக்குத்

தன்னிகராந் தமிழ்வளர்க்குந் தலைக்கழக மோடுதமிழ்

மன்னர்களும் புலவர்களும் வாழ்நிலையா விருந்ததுவே,


திராவிடம்


22.அந்நாட்டின் வடக்காவா னணிவிந்த மதன்றெற்கா

நன்னாட்டின் முன்னாட்டு நாடாநன் னலங்காட்டும்

பன்னாட்டு முன்னீட்டும் பயன்காட்டும் படியமைந்த

தென்னாட்டின் வடகாடாந் திருநாடு திகழ்ந்ததுவால்,



18, கொல்லம், குமரி முதலிய மலைநாடுகள். எல்-

ெப ரு  ைம, நல் இயல்பு ஆகி-நல்ல வளம்

பொருந்த. அ நாடு-பெருவளமும் தென் பாவியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/38&oldid=1203335" இலிருந்து மீள்விக்கப்பட்டது