பக்கம்:இராவண காவியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இராவண காவியம்


33.கோதி லாத குழந்தை குதலையைத்

தீது நன்றெனத் தேர்வரோ பெற்றவர்?

ஈது நந்தமி ழின்கதை யேயிதை

ஓது நாவனு முங்கள் குழந்தையே.


34.இன்மை யேது மிலாமை யெலாமுணர்

நன்மை சேர்தமிழ் நாவலர்ச் சேருமென்

புன்மை யான பொருளு மடைந்ததன்

தன்மை யாகுகன் னீரின் றகையவாம்.


35 வசைம லிந்த மறுக்கெட வண்டமிழ்ப்

பசைம லிந்து பயின்று பயன்பெற

இசைம லிந்த இராவண காவியம்

திசைம லிந்து சிறந்து திகழ்கவே.


காலம். வேறு


36.அமைகடைக் கழகப்பின்னோ ராயிரத்தெண்ணூற் வைத்தாய்

இமையுமா யிரத்துத் தொள்ளா யிரத்தொடு நாற்பத் தைந்தில்

அமைவுறக் குழந்தை நன்காய்ந் தருந்தனின் தமிழ்ப்பா வாக்கக்

கமையுறு தமிழர் மேலோன் காவியஞ் சமைந்தவாறே.



நூற்பயன்


37.தந்நிலை யுணர்ந்து வாய்மைத் தமிழர்களடிமை வாழ்வாம்

இந்நிலை தவிர்ந்து முன்ன ரிழந்தத முரிமை யெய்தி

முன்னிலை யடைந்து வாழு முறையொடு வாழ்வர், வீரக்

கன்னிலை நின்ற மேலோன் காவியம் பயிலு வோரே.



35,இமையும்--நிகழும், கீமை-பொ றுமை. கிடைக்

கழக முடிவு, கி. பி. 140க்குள் என்பது ஆராய்ச்சி யறிஞர் முடிவு. கிடைக்கழக முன்-' கம்முன், க, மு ' எனவும்; கிடைக்க ழகப்பின்-' கப்பின், க. பி' எனவும் வழங்கலாம், கி. பி. 1945- கி. பி. 1806, 87. கல் நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/34&oldid=1196128" இலிருந்து மீள்விக்கப்பட்டது