பக்கம்:இராவண காவியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79, எழுநிலை மாட க டத் தியன்றகல் தெருவும் தாங்கி நழுவிலா வளங்கள் மேவி நல்வழிப் படிவீ டெல்லாம் வழிவழி பெருகி மக்கள் வாழ்வதற் கேற்ற வாறு பழமரச் சோலை சூழ்ந்து பசந்திருந் தனசீ ஞரே. 80, இன்னபல் வளத்த தாகி யியற்கையி னியல்பி யாவும் மன்னிய குறிஞ்சி முல்லை வளமிலி மருத நெய்தல் அந்நெறி யமைந்த செல்வத் தைந்நிலக் கிழமை தாங்கித் தன்னிக ரிலாத மேன்மைத் தமிழகம் பொலிந்த தம்மா. 81. ஐம்பெருங் கண்டமாவின் றமைதரு முலகில் வாழும் வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த் தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால் இம்பரில் இதனுக் கொன்றீ டிதுவலால் பிறிதொன்றுண்டோ ? 3 மக்கட் படலம் வேறு 1. அத்த மிழகத் தாய்தரும் முத்த மிழ்த்துறை முற்றிய மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப் புத்து ணர்வுறப் போற்றுவாம். 2. முன்னு மில்லற முற்றியே தன்ன லங்கள் தவிர்த்துமே இன்னலஞ்செய் திசைபெறும் அன்னரே தமிழந்தணர். 3. அரசியன் முதலாகிய துரிசி லாது துலங்கவே வரிசையாக வகுத்துரை பரிசு காணிவர் பண்பரோ. -- ----- - ------ -------- 80. வளமிலி-பாலை. 2. முன்னுதல்-பொருந்தல். 3, துரிசு-குற்றம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/50&oldid=1536868" இலிருந்து மீள்விக்கப்பட்டது