பக்கம்:இராவண காவியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மொழிப் படம் 20, காதலரும் பாதவரைக் காதலிக்கும் கழிமடமும் காதலர்தம் மிடைத்தோன்றுங் கைகடந்த காமமதும் தீதெனவே நீத்தின்பத் திறந்தெரிந்து திகழ்ந்தார்கள் போதலர மதியெனப்பூங் குமுதமலர் புனனாடர், 21. காதல்முதிர்ந் தில்லறஞ்செய் காதலர் தா மவரோடு சாதலிலை யேற்றனியாந் தபுதார நிலைவாழ்தல் ஈதலது பலரைமணந் திடர்விளைக்கு மிழிசெயலைக் காதினுங்கேட்டறியார்கைக் களி றிளைக்கு மலைகாடர், 22. அறப்போர்செய் குவதன்றி யரசிழக்க நேரினுமே மறப்போர்செய் தறியாது மறஞ்செறிந்த மனத்தினராய்ப் புறப்பொருளின் முறையறிந்து பொருது புகழ் பூண்டிருந்தார் திறப்பாடெல் லாம்பொருந்தித் திருவளருந் தென்னாடர். 23. ஆன்றவிந்த தமிழ்ப்பெரியா ரந்தணரா மையரெனுஞ் சான்றவர்நல் வழிநின்று தமைப்போலத் தமையன்போ டீன்ற தமிழ்ப் பெருங்குலத்திற் கியன்றபோது நலஞ்செயவவ் வான்றவர்தஞ் சொற்பொருட்கண் ணமைந்தபழம் தமிழகமே. 6 தாய்மொழிப்படலம் வேறு 1. ஊக்கமு முணர்வு முளமுதன் மக்க க ளுயிர்மெயி னிருந்து தம் மதுரை நீக்கவு, மொருவர்க் கொருவர்தங் கருத்தை நினைத்தவா றெதிருரை யாடி மாக்களி லிருந்து மக்களா யுயர்ந்து வாழவும் வகைபட. முதலில் ஆக்கிய மொழிகந் தமிழ்மொழி யென்றா லாரிதன் பெருமையை யறைவார். 21, தபுதார நிலை-மனைவியை யிழந்திருத்தல். 1. உயிர்மெய்-பிசாணி, மாக்கள்-பகுத்தறிவில்லாதவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/61&oldid=987571" இலிருந்து மீள்விக்கப்பட்டது