பக்கம்:இராவண காவியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. இரானா காவியம் ஓகை யோடவர் வானினுங் கொடுமுடி யுயர்ந்த நாகை மாநகர் தனிலினி திருந்துநா ணாளும் ஈகை யோடுசெங் கோல்ற முதலிய வெவற்றும் வாகை சூடியே வழிவழி பொலிந்தனர் மன்னோ , 19. நாழி யாலுயிர் தாங்கிடு மக்களை நாளும் வாழ வைத்திடு முணவினில் குறைவிலா வளத்தால் சோழ முற் றுயர்ந் திருந்ததால் என்னவர் சொன் னார் சோழ மென் றதை யாண்டவ ராயினர் சோழர். 20 இந்த வார.வன் கிழக்குகா டாண்டவ ணிருக்கச் செந்த மிழ்த்திரா வீடந்தனக் கோர்தமிழ்த் திருவாய் மைந்த னைத்திரு மன்னவ னாக்கினா னன்னோன் பிந்தி வந்தவ ரே தமிழ்ப் பேரிசைச் சேரர். 21. தெருவி லாடி. ளஞ் சிறுவர்பந் தெறியவே சிதறி இருவி சும்பிடை.ப் புகுதர வினப்பகை யென்று வெருவி மாமதி மறைமுடி மேக்குயர் வஞ்சி மருவி யின் பொடு வழிவழி சிறந்தனர் மாதோ. 22. மாரி யோவறா வளமுடைத் தாகிய மலையின் சேரல் சூழக நாட்டிடை, வாழ்விடஞ் சேரச் சேரல் என்பதை யம்மலை நாட்டொடு சேர்த்துச் சேரம் என்றனர் ஆண்டவ ராயினர் சேரர். 28, மாரி போற்பொரு ளீந்துமே தாய்மொழி வளர்த்த சேர சோழ பாண் டியரெனத் தமிழர்கள் செப்ப வீர ராகவும் (.லவர்க ளாகவும் வெருவாச் சூர ராகவும் விளங்கினா ரிவர்வழித் தோன்றல், அன்ன மூவரும் தன்னின்கீ ழன்னசிற் றரசர் தன்னை யேற்படுத் தியல்பொடு தமிழகந் தன்னைப் . பன் னு நூற்றுறை பழுத்தநற் பழந்தமிழ்ப் புலவர் சொன்ன சொற்படி புரந்திசைத் தொடைபுனைந் தனரே. - 24. 18. ஓ கை- 2 வகை, வாகை-வெற்றி. 19, சோழம் உறு தல்-மிகு தல், சிறப்புறு தல். 29, (உதியஞ்) சேரல் எனவும் சேரன் என்னும் பெயர் வழங்குதல் சிரிண்கி ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/56&oldid=987576" இலிருந்து மீள்விக்கப்பட்டது