பக்கம்:இராவண காவியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இலங்கைப் படலம் 29. வாளெடுத்துப் பொருகளத்தே வலிமையொடு தொகைதொகையாய் ஆளடித்து முடிகுலுக்கி யரசர்கள்போ ரிடுவதுபோல், தோளெடுத்துப் பொலிகளத்தே சுமைசுமையாக் கதிரடித்த தாளடித்து முடிகுலுக்கித் தகவொடுபோ ரிடுவாரே. ஆளாலே பகைநீக்கி யதனாலே வளந்தேக்கித் தாளாள ரெனவேசெந் தமிழாளர் சொல்லுதலேர்த் தோளாளர் கொழுநுனியின் சுவையாலே யெனற்சுமைகொள் வேளாளர் பெருமைதனை விரித்தோ தப் படுமோ தான். 31. சொற்படுக்குஞ் சுவைமொழியார் சோறாக்கு மரிசிதனைக் கற்பொ றுக்கித் தவிடொழியக் கழுவிகலங் காணுதல்போல், மற்படுக்கும் பலன் கொடுக்கும் வளம்பாடுக்கு நிலமதனைக் கற்பொறுக்கி முட்பெருக்கிக் க” மர்கலங் காணுவரே. 32. தொடிப்புழுதி கஃசாக வுணக்கிடினத் தொகுபுழுதி 1,டித்தெருவும் வேண்டாது பெரும்பயனுண் டாக்குமெனும் 1 ,டித்துழுது புழுதியனைப் பலமுறைசெம் பாடாக்கி அடிப்புழுதி மேக்குறப்பெண் பாக்கிநலஞ் செய்வாரே. 33. பருவத்தே பயிர்செய்யும் புண்பறிந்து பைங்கூழ்நோய் ஒருவத்தா னேயெருவிட் டுழுதுவிதைத் திட்டவிதை கருவைத்த வுடனேநற் கதிர்காணு முறுதியுடைத் திருவத்த ராய்விளை வு செய்துநலஞ் செய்வாரே. 30. தாள் -முயற்சி, சுமை-கெற்சுமை, 31. மல்-உடல் வலி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/83&oldid=987579" இலிருந்து மீள்விக்கப்பட்டது