பக்கம்:இராவண காவியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கைப் படலம் 19. வலங்கொடுநல் லாரிடித்த மாவினிடைச் செம்பாகைக் கலங்கிடவார்த் தம்மாவைக் கருவிகொடு - கிளறுதல்போல், நிலங்குழைந்து மெதுவுறத்தண் ணீர்தேக்கிப் பதமாக்கி அலங்கொடுசே றதுவாக அணிவயலை யுழுவாரே. 20. பைந்தழையை மிதித்து முக்கிப் பதம்பாடகன் றாய்மசித்துச் செந்தமிழ்வாய்ச் செம்மொழியார் தீஞ்சுவைமாச்" சோறடல்போல், பைந்தழையை மிதித்துக்கிப் பரம்படித்துப் பழஞ்சேற்றைச் செந்தமிழின் செம்பாகஞ் செய்தொழுங்கு செய்வாரே. 21. கொழுஞ்சாற்றி னிடைமேயுங் கொண்டாள் சிப்பியிடை விழுஞ்சேற்றின் துளிமுத்தாய் மிளிர்கவெனப் பெய்யுதல்போல், உழுஞ்சாற்றி வந்துகட லுலகோம்! ம் பெருக்காளர் செழுஞ்சேற்றில் முளைக்கவெனச் செந்நெல்லை விதைப்பாரே. 22. அஞ்சாய விளஞ்சிறகா லடைகாக்க முட்டையிளங் குஞ்சாகி யுறை நீக்கிக் கொண்டுவெளிக் கிளம்புதல்போல், மஞ்சாரும் வளவயலில் மருவியிள நீர்காத்த செஞ்சாலியுமிநீக்கிச் செழுமுளை யாக் கிளம்பினதே. 23, வாணின்ற வொருகுடிவாழ் மக்கள் தனித் தனியாகத் தானின்று நனிவா ழத் தான் வைத்தல் போல் நாற்றங் கானன்று பெயர்த்தெடுத்துக் கவிழ்ந்தபடி திருத்திநறுந் தேனின்ற வின் சொல்லார் செழுஞ்சேற்றி னடுவாரே. 19. அலம்-கலப்பை . 26. பைந் தழை-கீரை, மிதித் தல்- அமுக்குதல். மாவுடன் கீரையைக் கலந்து ஆக்கல். 21. சாறு - ஆறுபாய் ஆலைக்கருப்பஞ் சாறு. விழும்சே று-நல்ல இனிமை. சாறு-விழா, 22, சாயல்-மென்மை , ஆர் தல் - பொருந்துதல், சாலி-கெல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/81&oldid=987581" இலிருந்து மீள்விக்கப்பட்டது