பக்கம்:இராவண காவியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவண காவியம் 14. கைத்தொழில் வணிகத் தோடேர்க் களத்தொழி, லெனுநீப் பில்லா முத்தொழில் களுமெல் லோரு முறையொடு பயில்கை யாலே இத்தொழில் தெரியா தாரீங் கின்றெனச் செருக்கி நாளும் எத்தொழில் களுக்குஞ் சான்றா யிருந்ததவ் விலங்கை நாடே. 15. முத்தமிழ் வளர்க்கு மேலோர் முறைமையி னிறைமை. புத்தொளி பெருகி யெல்லாப் பொருளுநற் பொருள் தாங்கிப் வாக வைத்திழி மடிமை தன்னை மருந்துக்கு மறியா ராய கைத்தொழி லாளர் வாழ்வு கவின்றதவ் விலங்கை நாடே. 16. கொள்வது மிகைகொ ளாது கொடுப்பதுங் குறைகொ டாதே உள்வது செயல் தாக உள்ள தியங் குறையு மேனும் எள்வது புரியா தென்று மியல்வது புரிந்து நேர்மை விள்வ தில் வணிகர் வாழ்வு மிகுந்ததவ் விலங்கை நாடே. வேறு 17. ஏராளர் கைவளம்போ லிடமாரக் குடம்பெய்த காராவே மலையாறுங் கான்யாறு மடைகுள மும் நீராலே நிறைவெய்த நிலமெல்லாந் தளைபட்ட சீராலே நிறைவெய்துஞ் செய்யுளெனப் பொலிந்ததுவே, 18, மடிமையிடைப் படியாராய் வளம் பெருக விளையுநில நெடுமையில மென் னாராய் நிலமெனுநல் லாள்மகிழ ரிடிமையற வுலகர்பசி வெருண்டோடப் பேரூக்கம் உடைமையரா யுழவர்நில முழவுதலைப் படுவாரே. 16. உள்வ து -எண்ணுவது. எள்வது-இகழத்தக்கது. விள்ளுதல்-நீங்குதல். 18. மடி-சோம்பல். மிடி- வறுமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/80&oldid=987582" இலிருந்து மீள்விக்கப்பட்டது