பக்கம்:இராவண காவியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்கோட் படலம் வேறு 21. வேலியே பயிரை மேய்ந்தால் மேலொரு காப்பின் றேபோற் கோலியே வேலி யாகக் குழவியைத் தாக்காப் பேபோற் சாலவே காத்து வந்து தாழ்க்கட லெனப்பேர் பெற்ற வேலையே கொள்ளு மானால் வேறினிச் செய்வ தென்னே, என் றவ ரமைதி கொண்டா ரென்னினு மிழந்த செல்வத் தொன்றற வொன்று வந்தாங் கூசலாட் டுறவே யுள்ளம் கன றியே கதறி மேலோர் கழிந்ததற் கிரங்கே லென்னும் நன் றியல் பொருளை யுன்னி நாள் கழித் திருக்குங் காலை. வேறு 23. குஞ்சோ ரைந்தின் மூன்றொழியக் கோவென் அ றல், பங் குருகேபோல் வஞ்சாய்! நீயுன் பொருளிழந்து மண்மே டாவா யென் றலற அஞ்சா தக்கா ராழிபினும் ஐந் நூற் றோட்டீ ராயிரத்தே எஞ்சா நின்ற பெருவளத்தோ டிந்திரப் பேரின் றாக்கியதே. 24. அந்தோ முன்போற் றமிழ்மக்க ளானார் வட்பா லடைவாகிக் கொந்தார் கானக் குலமுண்டு கொழுத்தே யடிமைக் குடியாக நந்தா வாய்மைத் தமிழ்நாடர் நலமுண் டகலா நிலைகொண்ட வந்தே றிகளைத் தீயாழி மண் வாய்க் கொண்டே வென் றதுவே. வேறு 25. தொன்றுள்ள நகரிழந்த தூயதமிழ்ப் பாண்டியனும் இன்றுள்ள குமரிமுனைக் கிருநூறு கற்றெற்கில் குன்றுள்ள மலரவருங் குமரியாற் றங்கரையில் நின் றுள்ள தென்மதுரை நெடுநகரம் புக்கிருந்தான், 03. க, மு. 2500. குருகு- குருவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/75&oldid=987587" இலிருந்து மீள்விக்கப்பட்டது