பக்கம்:இராவண காவியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கைப் படலம் 139. ஆண்டலை யடுப்புந் தோய்பா கடுகுழி சியுங்கொல் லேறும் தூண்டிலும் தொடக்கு மொன்னார் தொடுகைகுத் தூசி "யோடு தீண்டுநாற் றுவரைக் கொல்லி சென்றெறி சிரலுந் திண்ண பாண்டிலும் விழுங்கு பாம்பும் பணைபன்றி களிறே டாடும். 140. புலிகுடப் பாம்பு புள்ளுப் பொறியொடு தள்ளி வெட்டி வலியரி நாலி னோடு மற்றுமிவ் வகைய வான பலவகைப் பொறியி னோடும் பல்வகைக் கருவி யோடும் ஒலிபடைக் கொட்டில் போல) வுரனொடு விளங்கு மாதோ, 141. அம்மதி லுள்மே டைக்கீ ழம்பெயர் துளை கள் வாய்ந்த எம்மையுங் குறைவொன் றில்லா வேப்புழை ஞாயில்

  • மேவும்,

இம்முறை யுறுப்பு மேய விடையக மதில்க ளான . மும்மையு மகழி சூழ் மொய்ம்புடன் விளங்கு மன்னே. 139, ஆண் தலை அடுப்பு-ஆண்மகன தலைபோல மூன் று அடுப்பு போல் இணைந்துள்ள து. பாகு அடு குழிசி- எண்ணெய் காச்சவும், செம்பு உருக்க வும், சீரணிகரைத்துக் காய்ச்சவும், அ வை 28 ற்றி வைக்கவும் ஆன மிடாக்கள், கொல்லு று-எருத் துப் பொறி. தொடக்கு கழுத்தில் மாட்டியிழுக்கும் சங்கிவி. நா ற் றுவரைக் கொல்லி-ஒரே வீச்சில் நூ றுபேரைக் கொல்லும் பொறி, சிரல் மீன் கொத்தி. பாண்டில் - கேடயம், பணை - மூங்கில் போன்ற இரும்புக்கம்பிகள், 140. தள்ளிவெட்டி -மதில்மே லேறுவோரைக் கீழே தள்ளவும், வெட்டவும் ஆன கருவி. அரி நூல் பொறி உடலை அறுக்கும் நூல் போன்ற பொறி. கருவி-கைக்கொடு தாக்குவ து : பொ றி - விசை கொடு தாக்குவது. இம்மூன் று பாட்டுகளினும் கூறிய கருவிகளும் பொறிகளும் மதில்மேல் ஏறும் பகைவரைத் தடுத்தற்கும், அடர்த்தற்கும் மதி லுள் மேடையுள் உள் ளவையாம். இவற்றின் பயனை மதிற்போரில் காண்க. 141, ஏப்புழை, ஞா49ல் அம்பெய்யுந் துளை களை யுடைய அறிை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/103&oldid=987619" இலிருந்து மீள்விக்கப்பட்டது