பக்கம்:இராவண காவியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலாவியத் டோல் 1ம் 84. பருவமு முருவமும் பண்பு மொத்துள ஒருவனு மொருத்திய முயர்ந்த வேங்கையின் பெருநிழ லெதிர்ப்படும் பெரிய காட்சியைக் கருங்குழல் காதலன் களிப்பக் காட்டுமால். 85. தாவருங் குறக்குடித் தமிழ வாய்ச்சியர் நாவரு மனத்தரு நயந்து கைக்கொளப் பூவருந் தேனொடு பொருந்து செந்தினை மாவிருந் தூட்டியே மகிழு வாரரோ. வேறு 86. பண்ணென வினிக்குஞ் சொல்லார் படையெனப் பொலியங் கண்ணார் விண் ணெனத் திகழைம் பாலார் ஸ்ரின்னென வொளிரும் பூணார் உ ண்ணென ஆட்டுங் கையா ரொத்ததந் துணை வ ரோடு தண்ணெயைக் குளிர்ந்து காட்டுந் தடஞ்சுனே பாட அற்றார். 87, ஓடியே யொளிப்பா ரோடி யொளிப்பரைப் பிடிப்பா ரொன்றாய்க் கூடியே குதிப்பா ரெட்டிக் குதிப்பரைத் தடுப்பார் . கண்ணை மூடியே முனைப்பாய் நீருள் மூழ்குவர் மூழ்கு வாரைத் தேடியே பிடிப்பா ராகத் திளைத்துநீ ராடு வாரே, 88. செவ்விய கலவைச் சாந்தம் தெறித்து நீர்ப் படுக்கு வாரும் அவ்வளைக் கைக ளால் நீ ரள்ளியே யிறைக்கு வாரும் கொவ்வைவா யானீர் முக்கிக் கொழுநர்மேற் றுவு வாரும் இவ்வகை பலவுஞ் செய்தே யினிது ேராடு வாரே, 86. படை-வான், வேல். விண்-முகில். 2810பால்- கூந்தல்; முடி, குழல், கொண்டை , பனிச்சை , சுருள் என ஐவகையாக முடிக்கப்படுவது. 87. திளைத்தல்- மகிழ்தல். 88. .கொவ்வை-கோவைப்பழம், முக்கி-மொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/127&oldid=987626" இலிருந்து மீள்விக்கப்பட்டது