பக்கம்:இராவண காவியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. ஆமென்ன? ரவ்வளவே யடையாரைக் குடியோடிப் போமென்று வலிகாட்டிப் புகழ்பூத்த வரைத்தோளான் நாமன்றோ வுயிர்வாழ்வின் நல்வாழ்வுப் பயன்பெற்றோர் ஏமொன்று மலைவாணீர் குறையென் னோ வெனமகிழ்ந்தான். 68. மற்றவரும் பெருங்குன்ற வாணருட னளவளாய் உற்றநல் மத்தனை யு மொருங்கறியப் பரிமாறிச் சற் றுமன மகலாநந் தாய்வாழி யெனக் கூறிக் கற்றவருங் கற்றவருங் கலந்துகளித் தனகளித்தார். 33. ஓத்தபிறப் பினராய வுயர்ந்தோங்கு மலைகாடர் 'வைத்தலைவேல் மாமன் னா' வண்டமிழைத் தாய்மொழியா ஒத்தவெமக் கென் குறையோ? வுடனுறையும் பெருவாழ்வை வைத்ததுவே யமையுமென வணக்கமுடன் விடைகொண்டார். 70. ஆங்கவர் சென் றதன் பின்ன ரழகியபன் 4மலர்கொய்தும் பாங்குடனே யணியணியாப் பலவிளையாட் டுகளயர்ந்தும் தேங்கிய நீர்ச் சுனைகுடைந்தும் தெளிவெய்த மனக்கொண்டார் ஓங்கு பெருஞ் செல்வத்தா லுலகோம்புந் தமிழ்நாடர், பூங்கொடியின் பாடணைந்த பூங்கொடியார் கைபடவப் பூங்கொடியும் புறங்கொடுத்துப் பூங்கொடியா ரடிவணங்கும் பூங்கொடியே யதுவானாற் பூங்கொடியைப் புறங்கண்ட பூங்கொடியார்ப் பணியாத புகன் மறவ ருளரேயோ? 72. வேங்கையிண ரொண்பூவை வெடுக்கென்று பறித்தொருத்தி பாங்கொடியான் மகப்பெறவே பகைகொண்டு கைநீங்கி வேங்கையிடை. யொதுங்கினையோ மெல்லரிப்பொன் சுணங்கெனவே ஆங்கெறிய வயனின்ற வவள்கொழுநன் நனி நக்கான். 67, சம்-காவல், 71, புகல்-வெற்றி, புறக்கொடுத்தல் - வளைத்துப் பூப்பறித்தல், 72, அரி - நிறம். சுணங்கு - மாதர் உடலில் படரும் தேமல், வேங்கைப் பூவைத் தேமலென மயங்கினாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/124&oldid=987629" இலிருந்து மீள்விக்கப்பட்டது