பக்கம்:இராவண காவியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகளைப் படலம் 58, இன்னண யிவர்க ளாக வினியகண் காட்சி நல்கி மன்னவர் மன்ன னான மணமகன் குன் றி னின்று துன் னரி யிழிதல் போலத் தோலிழீஇ விடுதி புக்கான், மன்னனு முவதை பொங்க மணவிருந் தாற்றி னானே. 59. ஒளிமிகு மணியின் கண்மா சோடிடக் கழுவு மாபோல் அளிமுரல் குழலி னாளை யருமண நன்னீ ராட்டி வெளியடஞ் சாடை யாலே மெல்லெனத் துவட்டிப் பின்னர் நளிகருங் குழற்குத் தூய நறும்புகை யூட்டி னாரே. 80. அல்வியை மறைக்கும் புல்லி யதற்கற கென்னு மாபோல் வல்லியி னழகை முற்றும் மறைப்பதை யெண்ணா தின்பச் சொல்லியர் சுமக்க மாட்டாச் சுடர்மணிக் கலன்கள் பூட்டி எல்லியை யொளிசெய் வார்டோ லெழிலினுக் கெழில்செய் தாரே. 61. புதியவால் மதியம் போலப் பரிகருங் குழலை வாரி முதுகிடைப் படிந்து லாவ முருக்கித ழொருத்தி பின்னி மதியெனில் மறுவெங் கென்று மபக்ருவ ரென்னக் கண்டார் புதியவும் மதியின் மீது பொற்றப் பொட்டு மிட்டாள். 62. ஒருங்குயி ருண்ண வாளு மொள்ளிலை யொளிர்கெரல் வேலும் பெருங்கொலை நஞ்ச மூட்டிப் பிடித்தமைக் கண்க ளான வரும்பகை கெடத்தற் காப்பா மருங்குறு துணைமை யாகக் கருங்குழ லொருத்தி வள்ளைக் கா திடை. மணித்தோ டிட்டாள். 68. துன்னு தல்-பொருந்துதல். அரி-சிங் கம். தோல் யானை. 59. களி-செறிவு. 60, அல்லி-பூவின் அகவிதழ். புல்லி-புறவிதழ். எல்லி- சூரியன். இ-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/171&oldid=987672" இலிருந்து மீள்விக்கப்பட்டது