பக்கம்:இராவண காவியம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. மாரகம் பொருந்திய ஆரி னோர்களும் சீரகம் பொருந்திய திருவி னோர்களும் நீரகம் பொருந்திய நிலத்தி னோர்களும் ஊரகம் பொருந்தவே யுண்டு வந்தனர். அனையென வுளங்கொளா வன்பு பொங்கவே புனைமணி மாடbள் பொன் ன கர்க்குளே எனையரு முவப்பிலா ரில்ல ராகவே மனையகர் தோறும்பொன் மாரி பெய்தனர். 16. கடிநகர் புனைந்துலாக் காட்சி காணவே அடைவுட னாளர சலுவ லோடுகைப் படுதொழி லகங்களும் பணையும் பள்ளியும் விடுமுறை யாக்கியே விழவ யர்ந்தனர். 17, அண்ணலம் பெருமனை யகன்றெ ருவெலாம் சுண்ணமுஞ் சாணமுந் துதையத் தூர நிலா நண்ணியே சுவைபட நக்கும் பான்மைபோல் தண்ணியே வெண்பொடி சாந்தந் தூவினர். 18. நடைவழி யாக்கிய நறிய காடுபோல் மடைவளம் பொலிமனை மன்றத் தோன்றவே படுகுலை வாழையம் பாக்கு மேனவும் தொடுகுலை பூங்கொடி துதைய நாட்டினர். 18. வாரணத் தொடுபடா வளைந்து வான்றொடும் நீரண வியமுகில் நிலவிக் கண்படும் ஊரண வியபகை யுயிர்கொள் வாயெலாந் தோரணங் கட்டியே துலங்கச் செய்தனர். 14. மரகம்-கிராமம். 16, பணை-வியல். 17. அண்ணல்-பெருமை பொருந்திய, து தை,தல், 18. மடை-சோறு. மன் றம்-மரத்தடிப் பொதுவிடம். மனைகள் மன்றம் போல் தோன்ற. 19. வாரணம்-யானை. அணவிய்-கலந்த, அடைந்த, வசங்கரையில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/177&oldid=987696" இலிருந்து மீள்விக்கப்பட்டது