பக்கம்:இராவண காவியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. உய்த்துணர்வி னோடுலக வழக்கமது தலைப்பெய்தே யுனித்தா ராய்ந்த புத்துணர்வி னாலுள்ள முடையமுது திமிழ்மக்கள் புதுவாழ் வெய்தற் கெத்தகைய துறையனுநன் னாகரிகப் பெருங்கரையி னினிதே யேற வைத்திடுத லேயறிவர் முதற்கடமை யாகுமென வகுத்தே பின்னும். 69. போர்த்தொழிற்கு மனைவாழ்க்கைப் புதுத்தொழிற்கும் நல்லுணவைப் போற்றிக் காக்கும் ஏர்த்தொழிற்குங் குடித் தொழிற்கு மேற்புடைய கைத்தொழில்க எளியல்பின் மிக்க சீர்த்தொழிற்கண் படச்செய்தல் நிலங்காப்போர் தமக்குரிய செயலே யென் று; நீர்த்தொழிற்குச் சிறந்தானை முகநோக்க வவனெழுந்து நின்று சொல்வான். 70, உலகிலிலா மணப்பொருளு மணியணியுஞ் சங்கணியு முலகம் போற்றும் இலகிடுபொற் பட்டினொடு மயிர் நூல்பஞ் சாடைமுத லியன்ற வெல்லாம் கலநிறையக் கொடுவெளிநா டுற்றிறக்கிப் 'பொன் சுமந்து கரையை நோக்கிப் பலகலங்கள் வருவதும்போ வதுமொழியாக் கடலையென்றும் பார்க்க லாமே. 71. நானிலத்துப் படுபொருளும் மரக்கலங்கள் கொடுபோந்து நனிகர் நல்கும் மேனிலத்துப் படுபொருளுந் தலைமயங்கி யொருவருக்கும் விலக்கின் றாகிக் கோனிலத்துப் படுபொருள்போற் றமிழகமெல் லாங்கொண்டு கொடுக்க நாளும் வானிலத்துப் படுபொருளி னொளிபோலப் பொருணுழையா மனையொன் றின்றே. மேல்-மேற்கு, கோன் நிலம் - அரண்மனை, வான் நிலத்துப் படுபொருள் - சூரியன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/201&oldid=987702" இலிருந்து மீள்விக்கப்பட்டது