பக்கம்:இராவண காவியம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்ப் படலம் 185 28. மாந்தர் தம்மை வகையுறக் காத்திடும் வேந்த னன்றியவ் வேதியர் தாங்களே வாய்ந்த குற்ற வழக்கினைத் தீர்த்திடல் ஆய்ந்த நூன்முறை யாமெனு மல்லவர். 8. சூத்தி ரர்பொருள் சேர்க்கிற் றொழுகு முத்தர் துன்பத்துள் மூழ்குவ ராதலான், பூத்த வப்பொருள் பூசுரர் கொண்டுமே டாத்து வாழுதல் பண்பெனும் பாவிகள், 30. அருமை யாம்பொருள் யாவுமே தங்களுக் குரிய வென்று முலகினர்க் கன் னவை அருளி னானுகர் வாக்கியு ளேமென்றும் பொருளி லாது புளுகிடும் பொய்யர்கள். 31. துன்னும் பூசுரத் தொண்டினைச் சூத்திரர் பின்னர் நீப்பினிப் பேருல கங்கெடும்; அன்ன ரையொறுத் தப்பணி யாக்கலே மன்ன வன் கட னாமெனும் வஞ்சகர். 32. நாற்கு லத்தவ ருக்குமந் நஞ்சனார் பாற்ப டுத்த குலத்தொழில் பாங்குடன் ஏற்ப டுத்தபோ லென்று நடந்திடக் காற்ப டுத்தலே மன்னன் கடமையாம். 33, பேறு பெற்ற தமிழர் பிறப்பொருங் கூ று பட்ட வொழுக்க முடையவர் மாறு பட்டு வகைவகை யாகிய வேறு பட்ட வொழுக்க மிகுத்தவர், 34. ஆள்வி னைக்குறு மான் முத லாகிய நாள்வி துப்ப நட.க்கு முயிர்களைக் கேள்வி யற்றவை கீழவை யென்றுமே வேள்வி யென்றுகொன் னுண் ணும் மிதவையர். 29, பாத்து பங்கியுண்டு. 30. நுகர் தல்- அனுபவித்தல். 33, ஒருங்கு மாறுபட்ட ஒன்றாக மாறிய. விதுப்பு-நடுக்கம். மிதவை-உணவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/211&oldid=987722" இலிருந்து மீள்விக்கப்பட்டது