பக்கம்:இராவண காவியம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 இராவண காவியம் 15, மன்னர் மன்னவஎன்குலக் கொழுந்தினை மதித்தே அன்ன ரோடொரு நிகருறக் கொடுத்தலு மழகோ? பின் னு மூத்தவள் பிள்ளையன் றோமுறை பிழையா மன்ன னாகுவன் கோசலை யாண்டிட மதிப்பாய். 18, பெருமை யின்றியும், பெற்றெடுத் திடுமுதற் பிள்ளைக் குரிமை யின்றியும் மனைவியென் றழைத்திட வுனக்கென் அருமை யாய்வளர்ந் தென்குலம் விளக்குமென் னன் பை இருமை மேற்கொடுத் திடேனெனக் கிளந்தன னேந்தல். இன்ன வாறுகே கயனவ னெ திர் மறுத் திடவே; உன்னு மோர்பொருள் கைவரப் பெற்றிடா வொருவன் என்ன வேதச ரதனொரு துணிவிலா தினைந்து பொன்னை யெவ்வகை யடைகுவே னெனமனம் புலம்பி. 18. யாது சொல்லினு மதன்படி நடக்குவே னிலவட்: போதை வென்றவாய்க் கொடியிடை வரிசிலைப் புருவச் சூத மென் றளிர்க் குளிருடல் தளிரடிச் சுவைத்தேன் மாதர் மெல்லியல் தனைக்கொடுத் தென்குடி வனர்ப்பாய். கரிசனத்துடன் தசரத னிவ்வகை கழற, அரச கேட்டியுன் சொற்படி முடிக்குவை யாயின் வரிசை யாகவுன் கோசல நாட்டை.யென் மகட்குப் பரிச மாகவின் றேதரின் மணமுமப் பரிசே, 20, பெருமை யான வுன் நாட்டையன் வலியினால் பெரிதும் அருமை யானவன் முயற்சியா வீட்டினை யதனால், உரிமை யான தே கொடுத்திடக்; கொடுப்பதா வொப்பித் தருவ துண்டெனில் தானுமென் கொடியினைத் தருவேன். 21. என்று நன் மொழி புகன்றிடக் கேகயன், ஏந்தல் நன்று நன் றியா னப்படி யேயெந்தன் நாட்டை . இன்றை யேயுன தின் மொழிக் கிளிதனக் கீவேன் மன்றல் செய்தெனை வாழ்விப்பா யென் றனன் மன்னன். 16. இருமைமேல்- இருமனை விகளிருக்கப் பின னும். 17. இனைந்து வருந்தி, 18. குதம்-மாமரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/226&oldid=987737" இலிருந்து மீள்விக்கப்பட்டது