பக்கம்:இராவண காவியம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதினைத் தடுத்துக் கெடுத்தனர்; மேலும் வருத்துதல் தகாதென மறுத்தாள்; ஆதலா லதனை விடுத்தவ ள மைதிக் காவன புரிந்திட வமைந்தேன். 8, பாவைய ரெங்கை பணிதலை நின்று பசுமயிற் குழாமெனக் கூ டி ஏவலிற் றிறம்ப லென்பதை யறியார் இனியன் வாயகம் பொருள்கள் யாவையு மவளுக் குரியவை யின் னும் ஆவன வுண்டெனிற் செய்கம் பூவையுங் குயிலும் கிள்ளையும் பாடும் புனிதவின் தமிழகம் புரப்போய்! 10. தங்குடி மக்கள் அரசிலை யென்று தவித்திடத் தன்னலங் கருதி இங்கியா னிருத்தல் தகாதென யானும் இருமெனக் கூறியுங் கேளாள் அங்கினி தேகி யிருந்து தன் மக்கட் கரசியா யருந்துயர் மறந்து மங்குலை நிகர்ப்பக் குடிபுறங் காத்து வருகிறாள் மதிமுக மானும். 11. கரனெனு மிளை யோன் வேண்டுவ செய்து கண்ணிமை யாமெனக் காப்ப மரமடர் விந்த நாட்டினிற் புரிசை மதியணி விந்தக மதனில் ஒருகுறை .என் றிப் புனமயில் போல ஒப்புடன் போற்றுமெய்த் தோழி அருகுற வினிது வாழ்கிறாள் தமிழர் அரசியாய்ப் பரிசோடா தலினால். 12, இனை யுதல் தவிர்க, என்றுமே தலைவி இனியன பலசொலித் தேற்ற அனையீனு மினிய வன்பொடு தமிழர்க் காக்கமே யனானொரு வாறு மனமது தேறிக், 'கண்மணி! என்றன் வாழ்வினுக் கடிப்படை யாவார் நினையல வேறு கண்டிலேன் ' என்ன நீள்குழல் தடவியென் மயிலே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/245&oldid=987748" இலிருந்து மீள்விக்கப்பட்டது