பக்கம்:இராவண காவியம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287 அரசு காவியம் 111. ஏதுமே ய றியான் போல ஏ ன டிக் கின்றாய்? உங்கள் சூதினை யறிவேன்; தந்தை சொல்லவு மில்லப் போலும்! மாதெனை மணந்த போதே வழங்கினேன் நாட்டை யென்று; பேதையென் றெண்ணி யென் னைப் பசப்புரை பேசு கின்றாய். 112. நல்லவன் போல வென்பால் நடித்தசூ தறியா துன்னை நல்லவன் என்றி யானும் நம்பியே மோசம் போனேன் அல்லவன் போலுன் தம்பிக் கிரண்டக மதுசெய் தாயே; கொல்லவு மஞ்சு வாயோ கொடியநீ பரதன் றன் னே 113. தந்தையைத் தடுத்தா யில்லை, தம்பியை யழைத்தா யில்லை, வந்தெனக் குரைத்தா யில்லை, வஞ்சகன் மான ரில்லா உந்தைசெய் திடுமச் சூழ்ச்சிக் குடந்தையா யிருந்தே யெந்தன் மைந்தனைக் கெடுக்க நீயும் வஞ்சனை புரிந்திட் டாயே. 144. அடிக்கடி, யுன்றாய் தந்தை மனைவியர் அனையா ரெல்லாம் மடிக்குளே நெருப்பை வைத்துக் கொண்டுமே வந்தென் முன்னர் நடிக்கவே நல்ல ரென்று நம்பியான் மோசம் போனேன்; முடிக்குமுன் உடைந்து; தாழி மோசம்போ னீர்கள் பாவம்! 115. என்மகற் குரிய தாக எனக்குமுன் கொடுத்த நாட்டைத் தன் மகற் குரிய தாக்கத் தவித்தனள் உனது நற்றாய்; மன்மகன் உனது மேனி யழகெனு மயக்கத் தாலே தன் மகன், தன் சொல், தன் பேர், தன்மதிப் பையுங்கை விட்டான், 116. உடையனை பூரி லில்லா தோட்டிவிட்டவனில் வேளை குடிகளை வழிப்படுத்திக் கொண்டனை; கொண்டன் னோரால் முடிபுனை வழியுஞ் செய்து மோசஞ்செய் திட.வும் பார்த்தாய்; கடிதினில் நாட்டை விட்டுக் கானகம் செல்வா ' யென்றாள். 144. மச-வயிறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/278&oldid=987775" இலிருந்து மீள்விக்கப்பட்டது