பக்கம்:இராவண காவியம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிதியடி பெற்று மீன் படலம் 269 13. தெள்ளு கானத் தெருவிடைச் சென்றுவான் கொள்ளு மோவியக் கூடத்தைக் கண்டுபோய் உள்ளு மோரிடத் தொண்புகை கண்டவன் நள்ளு தானை நிறுத்தி நடந்தனன். 14. அஞ்சிச் சேனைக் கடைந்த விலங்கினை வஞ்சிக் கின்பப் புலாலின் வகையினைக் கொஞ்சித் தின்று கொடுத்து மகிழ்ந்திடும் நஞ்சத் திண்சிலை ராமன் வினாவவே. 15. வானி னோங்கு மரத்தினி லேறிவான் சேனை கண்டு திடுக்கிட் டிலக்குவன் மானை யுட்குகை வைத்து நெருப்பணை ஆன போர்க்குத் தயார்செய்கு வாயென. 16. என்ன வென் னப், பரதன் எதிர்த்தனன் துன் னு தானைத் தொகையொடு வந்தனன்; இன்னை யேயவன் இன்னுயிர் போக்கியான் மன்ன னாவுனை வாழவைப் பேளென்றான். 17. வென்றி யாளனி வில்லினில் வல்லவன் நன்று நன்றவன் நம்மோடு போர்க்கல இன்றெ னயழைத் தேக வருகிறான் என் று கீழிறங் கென்ன விறங்கினான். 18. மொண்டு பெய்யு முகிலென முன்னனைக் கண்டு சென்றுமுன் கைகயி மைந்தனும் அண்டி யண்ண னடித்தல் மீதுவேர் விண்டு வீழ்மரம் போல விழுந்தான் . 19. தாளில் வீழ்ந்தழுந் தம்பி தனை யெடுத் தாளி மொய்ம்பின ராற் றுவ ரோபிரிந் தேள னஞ்செய் தெனைக்குடி கேட்டரோ? வேளை பார்த்து விரட்டின வோபகை? --- ------ - - - --- -- ---- 13. மள்ளு தல்-செறிதல். 16, மான்-சீதை. குகை உள், 19.1ஆளி-சிங்கம். மொய்ம்பு-வலி. உன்னை இகழ்ந்து , என்னைக் கேட்டாரேர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/295&oldid=987789" இலிருந்து மீள்விக்கப்பட்டது