பக்கம்:இராவண காவியம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 இராவண காவியம் 5. கனியொ டுபுலால் காணிக்கை யாய்க்கொடு தனிய னாகச்சென் றா ைவர் தம்மிடம்; அனையன் யாரென அண்ணல் அமைச்சனை வின வ வேகுகன் என்றிடும் வேடர்கோன். பீழை யற்ற பெருமகன் இன்னுயிர்த் தோழன்; கங்கைத் துறையை யுடையவன்; ஏழை யாளனை அக்கரை யேற்றியே வாழ வைத்து வழித்துணை யேவினோன். 7. உன்னைக் காண வருகிறான் உண்மையான், என்னக் கோ னும் அழைத்திட, எய்தியே மன்னைக் கண்டு வணங்கியே கையுறை தன்னைக் கொண்டு கொடுத்துத் திகவுடன், 8. அண்ண லேபடை கண்டைய மாயினேன் அண் ண லையழைத் தேகவோ? அல்லதெவ் வெண்ண மோவென , வேயழைத் தேகவே நண்ணி னோமென நம்பியைப் போற்றினான். 9. உங்க ளூரிது தங்கியின் அண்டு நீர் அங்கு சென்மென, ஐய! மகிழ்ந்தனன் தங்கு வேன் வரும் போது; தடம்புனல் கங்கை தன்னைக் கடந்திடச் செய்கென, 10. நடந்து தோணியை நண்ணிடப் பண்ணவே அடைந்தி யாரு மமர்ந்துநா வாய்களில் கடந்து கங்கையைக் காலின் விரைந்துபோய் அடைந்து பார்த்து வாச ன கத்தினை, செலமு னிந்து செருச்செய வோவென, இலைய ழைத்தவ ணே கவந் தேனெனப் புலவுங் கள்ளும் பொருந்த வருந்திட உலைவி லாவிருந் தூட்டினன் அம்முனி. எம்பி யங்கள் விரவைக் கழித்துமே நம்பி வாழ்விடம் நற்றவன் கூறவே பம்பு சேனையி னோடு பரதனும் தும்பி வாழும் தொடர்வழிச் சென்றனன். 6. பீழை-குற்றம். ஏழையாளன் -ராமன். 12. பம்புதல்-நிறை தல. தும்பி-யானை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/294&oldid=987790" இலிருந்து மீள்விக்கப்பட்டது