பக்கம்:இராவண காவியம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெசபெத்து என் படலம் ஆY 37. தந்தை யின்னுடல் தன் ளை யடக்கஞ்செய் தெந்தை தந்தநா டீகுவே னண்ணனுக் கிந்த வேளை யெழுகென் றிசைவலான் உந்து தானைத் தலைவனுக் கோதினான். 38. குடிக ளோடு குறுநில மன்னமைச் சடைய வேயவை யாக்கி வசிட்டனும் முடிபு னைந்திட வேண்டிட முன்னனுக் குடைய தாமென வோ திப் பரதனும், பெற்ற தாயும் பெறாவனை மார்களும் குற்ற மேய வமைச்சுங் குருக்களும் மற்று ளாரும் வள நகர் புல்லென உற்ற தானை யுறவொடு போயினான். 10. மிதியடி பெற்று மீள் படலம் 1. போயி னானகர் புல்லெனத் தோரண வாயில் நீங்கி மகளினைத் தேடுகைத் தாயி னேங்கித் தடந் துயர் தாங்கியே சேய கானஞ் சிறுகிட த தேடியே, 2. நடந்து கோசல நாடுபின் னாகிட உடைந்த வுள்ளமு மூறிய துன்பமும் தொடர்ந்து பின் வரத் தோன்றல் வழியினைக் கடந்து கங்கைக் கரையில'ல் தங்கினான். 3. சேனை யோடு திருமகன் சேர்ந்ததைக் கான வேடர் குலக்குகன் கண்டுமே கோனை நாடியோ? நம்பினங் கொல்லவோ? போன வீர னொடுடொரப் புக்கனோ? என்னு மைய முடனவ் வெயினர் கோன் துன்னு கங்கைத் துறைதனைக் காத்திடத் தன்னி னத்தைத் தயார்செய் தொருவனும் அன்னர் தம்மை யணுகிட வெண்ணணியே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/293&oldid=987791" இலிருந்து மீள்விக்கப்பட்டது