பக்கம்:இராவண காவியம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான்புகு படலம் 288 22, ஓகை மீக்குற வுற்ற படகுகா லாக மற்றவ ரக்கரை சேர்ந்ததைப் பாக னோடு குகனின்று பார்த்துப்பின் ஏகி யேதம் தில்லினை யெய்தினான். 23. ஓங்கு மோவியக் கூடம் துற்றனர் தீங்கி லாரெனத் தூதர்போய்ச் செப்பலும் ஆங்கு நின்றுதேர்ப் பாக னகன்றுபோய் வீங்கு மாட வயோத்தியை மேவினான். மேவிப் பாகன் விழிப்புனல் சிந்திட ஆவித் தாவி யலமரும் அண்ணலை மேவிச் செல்வன் விளம்பிய க றவே கூவிக் கோவெனக் கோமகன் வீழ்ந்தனன், 25. மண்ணை மோதியென் மைந்தவோ வாவென, அண்ண லுந்தெரி யாமையாற் கெட்டனென் றெண்ணி யெண்ணி யிராமன் பிரிவெனும் புண்ணி னோவாற் புலந்துயிர் விட்டனன். 26. செய்தி கேட்டடவன் தேவியர் யாவரும் உய்தி யோவிலை யோவென் றமுதனர்; பெய்து நெய்யிற் பிணத்தை யிருக்கையில் செய்தி கேட்டுத் திரண்டன குரவர், 27. அன்னர் பேரவை யாக்கி வசிட்டனை மன்ன னின்றி வருந்துதல் ஆகுமோ? மன்னன் மக்க ளொருவரை மாதவா! மன்ன னாக்குக வென்ன வசிட்டனும். 28. பாரை மன்னன் பரதனுக் கீந்தனன் ஊரை யாள வுரியவ னாகுவன்! வீர ரோடு விரைந்து போய்க் கேகயம் சார வீங்குசெய் யென்னச்சித் தார்த்தனை. 32. பாகன்-சுமந்திரன். 23. குகனுடைய தாதர் இராமனுடன் சென் மு; வந்து செப்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/291&oldid=987793" இலிருந்து மீள்விக்கப்பட்டது