பக்கம்:இராவண காவியம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பூவலர் பொலங்கழல் பொருவில் தானை யான் நாவலர் நயம்பட நவிலு நற்றமிழ்ப் பாவலர் பொருளெனப் பரந்த சீர்த்தியான் ஏவலர் தனியுற எழுந்து போயினான். 3, போனவன் மரமடர் புனத்து வாழ்தரு மானினஞ் சூழ்தர வண் ண மாமயில் தானெனத் தோழியர் தம்மொ டாடி. மேனிநல் லாளமர் நிலையை மேயினான். 4. மேவிய திருவுடை வேந்தர் வேந்தனை பூலைய ரிடையொரு பொன்னம் பாவையும் நாவலர் உள்ளமும் நயப்ப வாடுவாள் காவியங் கண்ணிணை களிப்பக் கண்ட.னள். 5. கண்டதும் வெறிதென நீத்துக் காவினை வண்டமர் கருங்குழல் மாதர் மாதரும் வண்டமி ழிசை நுகர் மன்னர் மன்னனை த் தண்டமிழ் வாய்மலர் தவழச் சார்ந்தனள். 8. சார்ந்தவக் காதலந் தையல் கையினை வேந்தனும் பற்றியாழ் விரும்பு மென் மலர்க் சுந்தலைத் தடவியொண் குழையை நீவிகாட் பூந்தொடை திருத்தியொப் புரவு செய்தனன். 7. காதலங் கண்ணியுங் கதிர்வை வேலவ! போ தினை நாடிடும் பொலங்கை வண்டர் போல் ஏ திவ ணேவலர் இருக்கத் தாங்களே மாதெனை நாடி யே வந்த தென் றனள்? 8. அப்படி யொன் றிலை; அரிவை சீதையும் எப்படி யுள்ள னள்? எழிலுக் கோர்புகல் செப்பெனத், தமிழிசை யேமுஞ் சேர்தரும் வைப்பெனப் டோசிடும் மழலைச் சொல்லியே. 2. பா அலர் - பாட்டிலுள்ள, 6. யாழ்-வண்டு . 8. புகல-புகுமிடம். வைப்பு-இடம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/354&oldid=987850" இலிருந்து மீள்விக்கப்பட்டது