பக்கம்:இராவண காவியம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. மானமும் வெட்கமு மறைந்து தன் மதிப் பானது பாவியென் றகல ஆண்மையும் போனது பேடெனப் புலந்து புல்லெனத் தானவ னாகிய தனிமை வாழ்க்கையன், 20. வான்பிறந் தொளிர்கதிர் மானு மண்ணிலோ டேன்பிறந் தான்ெப தெவரு மோர்கிலர்; கான்பிறந் தெருக்கன்பால் கைப்ப இன்சுவை தான்பிறந் திடுநறை தம்மை யொக்குமால். 21. உடலிடைத் தோன்றியவ் வுடலொ டேவளர்க் துடலினை யூறுசெய் தொழிக்கு நோயனான்; மடலிடைக் கருக்கினை மானுந் தீயவன்; குட. லிடைப் புண்ணினுங் கொடிய பாவியே. இரும்பினா லியன்றவா வீர மற்றதே இரும்பினா லியல்துன மிணைத்துக் காத்தல்போல் கரும்பெனுந் தமிழிறை காக்கத் தம்மரை அரும்பகை யோடு சேர்ந் தழிக்கும் பாவியே. ஓட்டிய மதிவலி யுகுத்த பாவியைப் பெட்டைமெய் வருந்தியே பெற்றதோகையாம் உட்டிகழ் கருவினோ டோடு மற்றபொய் முட்டைபோ லன் னையு முயன்று பெற்றனள். 24. நீட ண வியமுகில் நிழலி லார்கொடிக் கோடண விலங்கையர் கோனைப் போலவே, பீடண வுவனெனப் பேணிப் பெற்றரால் பீடணன் எனப்பெயர் பெற்ற புல்லியன். 19. புலந்து வெறுத்து. 20. நறை-(எருக்கம் பூவிலுள்ள) தேன். 21, மடல் பனையோலை. 13. துனம்-துன்ன ம்- காசி. 25-ம் திவலி. அறிவும் ஆற்றலும். பேட்டை -பெண் கேசடு, உள் இகழ். சில கோழிகள், ஒவ்வொரு சமயம் சுருவும் ஒடும் இன்றிக் குழைந்த நிலையில் உள் ேதால் மட்டுமுடைய முட்டையிடும். அது குஞ்சு பொரிக்கரி து. அது - 'தோகை முட்டை, பொய்முட்ட்ை' எனப்பெயர் பெறும். தோகை-சருகு, 24. ஆணவிய-பொருந்திய, கோடு-கோபுரம். பீடு- பெருமை. பீடணன் -பெருமை பொருந்தியவன். 23,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/368&oldid=987866" இலிருந்து மீள்விக்கப்பட்டது