பக்கம்:இராவண காவியம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 15. 12, இழுக்களில் தமிழர்கள் இழிவு பெற்றிட ஒழுக்கமில் ஆரியர் உயர்வு பெற்றிட முழுக்குடை மதிநிழல் முதிய னுக்கெதிர் விமுக்கனி யெதிரிடை வேப்பங் காயனான், 18. கலம்படு தமிழர்கள் நலத்தை நன் றிலா அலம்படு மாரியர்க் காக்கித் தம்முனைக் குலம்படு களத்திடைக் கொன்று சால்புகொல் கலம்படு செம்பினிற் களிம்பு போன்றவன். 14. குடிமையா யாரியர் குலவத் தாயக முடிமையோ டிறைவனை முனையில் வீழ்த்தியே அடிமையாய்த் தமிழர்க ளலையத் தெவ்வரால் படியிலாழ் வாரெனும் பட்டம் பெற்றவன் , அடிமையும் தீமையும் அவாவும் வஞ்சமும் கொடுமையுஞ் சிறுமையுங் கொலையுங் கூரமும் மடமையும் பொய்மையும் மறமுங் கள்ளமும் படிமையாய் மகனெனப் படியில் வந்தவன். 18. அன்பில னருளிலன் அறமி லன் சலன் தென்பிலன் திட.மிலன் செம்மை நன் றிலன் முன்பிலன் மதியிலன் முறைமை கண்டிலன் இன்பிலன் மக்கட்பண் பெதுவு மில்லனே. 17. தன்னல மென்பது தனக்கி லக்கியன்; துன்னல ரடியில்வீழ் துறைக்கி லக்கணன்; புன்னல மல்லது பொதுந லமில் கெந்நிலந் தன்னிலு மிணை யி லாதவன், 18. கராவிடை. வாழ்ந்திடுங் கயவன் ஆரிய இராமனை நல்லனென் றியம்பி வாயினால் பராவியே தம்முனைப் பழிக்கு நஞ்சுடை அராவினுங் கொடியவ னகப்ப கையினன், 12, எதிரிடை-மாறுபாடு. 13, அலம்-நலமல்ல து. கீலம் - பா த திசம், 15. கூரம்-பொறாமை, (மறம் -பாவம், படிமை வடிவு. 16. சலம்-தீராச்சினம், முன்பு-வலி, 18. கார்வு-மறைவு, பொய்த் தவக்கோலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/367&oldid=987867" இலிருந்து மீள்விக்கப்பட்டது