பக்கம்:இராவண காவியம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீதை துயரூர் படலம் 37. அஞ்சல் தமிழர்கள் அன்பும் ஆண்மையும் கொஞ்சியே உறவுகொள் குணத்த ரென்பதை வஞ்சியே யறிந்து மகிழ்வை யுன்னை நான் வஞ்சியே னென் றிறை மறுத்துக் கூறவே. 38. சோர்குழல்! துயரலை, என்று தூயவண் டார்குழல் தேரனம் வகுத்துத் தேற்றவே, கார்குழல் சரிசரி கடிது சேர்த்துமிவ் வார்குழல் தனையென வணங்கிக் கூறினள். 39. தண்டமி முனுஞ்சரி சரியென் றாழ்துயர் விண்டிடத் தகுமொழி விளம்பி; மேதகக் கொண்டுவந் தவைபெறக் கொடுத்துப் பின் பொருங் குண்டுவந் தவளையு முவப்பிச் சென்றனர். 8. சீதை துயருறு படலம் வேறு 1. ஆங்கவர் போய பின்னர் அருந்தமி ழிறைவ னுள்ளப் பாங்கினை யெண் ணணி யெண்ணிப் பரிந்துள்' நைவாள்; பின்னர் சங்கினி திருப்ப தல்லால் இலையினிக் கூட லென்றே ஏங்கியே யெரியிற் பட்ட இமுதெனக் குழைவா ளுள்ளம். 2. இனத்தினர் தமைக்கொன் றையோ இலங்கை வேந் தனுக்கு மேலும் சினத்தினை மூட்ட லல்லால் சிறியனை மீட்க வன்னார் மனத்தினி லெண்ணங் கொள்ளல் மருந்துக்கு (மில்லா ராகிப் புனத்தினரி லிரிதா னுண்டு பொழுதுபோக் கின்றார் போலும்! 8. சின்னவன் பேச்சைக் கேட்டுச் சிறிதுமே பகைமை யிவ்லா முன்னவன் தன் னைக் கொன்று முறையிலா திாையோன் க றன்னை மன்னவ னாக்கி யன் னான் வழித்துணை யாகக் கொண்ட தென்னவோ! இலங்கை போதல் இதனினு மரியா ' தேயோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/359&oldid=987875" இலிருந்து மீள்விக்கப்பட்டது