பக்கம்:இராவண காவியம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவண காவியம் 31. அலங்கிய பாவியால் ஐய! நீள்மதில் இலங்கைவாழ் தமிழருக் கிடருண் டாகவோ? பொலங்கழ லோயெனைப் போக்கி யாண்மெனக் கலங்கிய மொழிகளால் கரைந்து வேண்டினாள். 32. அவ்வுரை கேட்டாலும் அண்ணல் அம்மணி! இவ்வுல கத்தினில் இலங்கை முற்றிடும் செவ்வியர் உளரெனல் செவிடன் ஏ1 ழிசை ஓவ்விய திதுவென உவத்தல் போலுமே. திருமதி யுனையவண் சேர்த்த பின்னவர் வருவதைத் தடுப்பவர் யாவர்? மன்னவர் பொருவதற் கஞ்சுதல் பூனை யோரெலி வருவதற் கஞ்சுதல் மானு மல்லவோ? 34. மாதுநீ வருந்தலை மறைந்து வாவியைக் காதியே கொன்றவன் கணவன் பாலொரு கா தனை யனுப்பியிங் கடையைச் சொல்லியே (போ தலர் குழலுனைப் போக்கு கின்றனன். 35, கன்னலஞ் சொல்லியுன் கணவற் கஞ்சிமா மன்னவர் எள்ளுற வலியப் போமென உன் னையங் கனுப்புதல் உரனும் மானமும் முன்னிய வெனக்கது முறைமை யவ்லவே. 36. ஆதலால் வந்தபின் அனுப்பு கின் றனன் மாதுநீ முன்னைபோல் வருத்த மற்றிரு; கோதையீங் குனக்கொரு குறையுண் டாமெனில் பாதுகாப் பிழையெனப் பழிப்ப ரல்லவோ? தந்தை முறையாகி, ராமனுக்குக் கொடுத்தது போல், மனைவி யாகப் பெற்ற ராமன் இலைக்குடிலில் தனியாக விட்டகல், பின் எடுத்துவந்து இனி து போற்றிய நீரும் எனக்குத் தந்தையே வாதலால் உரியவனாகிய அவனுக்குக் கொடுத்தல் அ.தினும் சிறந்தது என் றனன். 3!. அலங்குதல் தத்தளித்தல். 36. கன்னல்-கரும்பு. முன்னிய-மிக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/358&oldid=987876" இலிருந்து மீள்விக்கப்பட்டது