பக்கம்:இராவண காவியம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

863 2. கண்டி பாமங் கடைப்படு போதகல் பெண்டி யாவள் எனவெதிர் பேசிடா தொண்டி யாக வொதுக்குறக் காவலர் அண்டி நோக்கியோ ராணென வையுறீஇ. 3. யாவ ளென்ன வதட்டி வெளியினில் போவ தென் னவி நள்ளிருட் போதினில் நோவி லாமல் நுவலென; அஞ்சிய பாவி யொன்றும் பகர்ந்திலன் நிற்கவே. 4. உண்மை சொல்லி னுயிர்பிழைப் பாயென அண்மை செல்லவை யோவென, ஆரடா! பெண்மை யானது பேசெனக் கைகளைத் திண்மை யாகப் பிடிக்கத் திமிறினான். 5. கள்ளக் கோல மகற்றியக் கள்ளனைக் கொள்ளப் போந்த பொருளினைக் கூறென உள்ளத் தோங்கு முளவை யுரைத்திடான் மெள்ள த் தேங்கி வெளிப்படப் பார்த்தனன். 6. ஓடிப் போக உனைவிடோ மென் றவர் கூடிக் கைகளைப்பற்றக் கொடியனும் ஓடிப் போவீ ரிலையேல் உமதுயிர் ஓடிப் போகு மொருநொடி தன்னிலே. 7. என்று கூறி யெதிர்க்கவே காவலர் ஒன்று கூடி யுதைத்தவன் கைகளைக் கன்றி வீங்கிடக் கட்டிவைத் தேயிருள் பொன்ற வந்து பொழுது புலர்ந்ததும். 8. மட்ட வீழ்த்த மருமலர்க் காவகம் விட்டு ளத்து வெகுளி தணிந்துகைக் கட்ட விழித்திரு கைப்பிடி யாய்க்கொடு கொட்டி சைத்திருக் கோயிலை நண்ணியே. வண்ண வண்டு மகிழ்ந்திசை பாடிட உண்ணு முண்ணுமென் றூட்டி யுலப்புறும் தண்ணந் தாமரைத் தாரணி மார்புடை அண்ணல் முன்ன ரவனை நிறுத்தியே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/379&oldid=987885" இலிருந்து மீள்விக்கப்பட்டது