பக்கம்:இராவண காவியம்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகயெழுச்சிப் படலம் அன். 18 ஆகை யாலினி யையுறேல் தோகை யொன் றினுஞ் சோர்விலள்; ஓகை வேலவ னும்பியும் வாகை சூடினன் வாழநி. 17. என்ன வென்னவஃ தென்னவே முன்ன னோடவன் முரணியே என் னை வேண்டினா னினியனும் உன்னை வேண்டென வோதினேன். 18, அடிமை யாயுனை யடைந்திட முடிவு செய்தனன் முடிவிலோய்! வடிவி லங்கையின் மன்னனா முடிபு னைந்திடல் முறைமையே. மறவ ரோடவன் வருவதா உறுதி கூறினன் உண்மையான் பெறுதி நீயவன் பெட்பினை இறுதி முத்தமி ழிறைவனை. 20. பெயரி லோவவன் பீடணன் உயிரை யுமுனக் குதவுவான் அயரி லா துலை யடைவதா இயல்பு ளாளினி தியம்பினான். 21. ஒன்று வானவ ணுற்றதும் இன்றை யேபெயர்ந் தேகி நாம் சென் றி ராவணன் சிதைவுற வென்று சீதையை மீட்குவோம். துன்று நீள்படை சூழவே இன் றை யேமதி லிலங்கையை நன்று முற்றிடட நடக்குவாம் என்று மற்றவ ளியம்பவே, 22. 19. இறுதி-ஒழி, வெற்றிகொள். 20. அயர்-ஐயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/387&oldid=987907" இலிருந்து மீள்விக்கப்பட்டது